/* */

காஞ்சிபுரம் : டாஸ்மாக் கடைகள் திறக்கும்முன் இருப்பு நிலையை ஆய்வு செய்ய கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு முன்பு இருப்பு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : டாஸ்மாக் கடைகள் திறக்கும்முன் இருப்பு நிலையை ஆய்வு செய்ய கோரிக்கை
X

கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பரவ அதிகமாக உள்ள இடமாக பொதுமக்களால் அதிகம் சுட்டி காட்டபட்ட அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. அன்றைய இருப்புநிலை அனைத்தும் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மது கிடைக்காமல் மதுப் பிரியர்கள் பெரிதும் அல்லல்படுவதை உணர்ந்த சில டாஸ்மார்க் ஊழியர்கள் கடைகளில் இருந்த மதுபானங்களை எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

சராசரி விலையை விட இருமடங்கு மும்மடங்கு என காஞ்சிபுரத்தில் உள்ள சில கடைகளில் விற்பனையாளர்களால் கள்ளத்தனமாக விற்கப்பட்டு வருவதாகவும் இதில் மாவட்ட டாஸ்மாக் அலுவலக ஊழியர்கள் வரை பங்கு உள்ளதாகவும் ஓரு தரப்பினரால் கூறப்படுகிறது.

இதனால் நாளை கடை திறக்கும் முன்பு கடையின் இருப்பு நிலை சரியாக உள்ளதா என்பதை அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் முறைகேடான விற்பனையில் ஈடுபட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 13 Jun 2021 3:22 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்