/* */

காஞ்சிபுரம் : பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையின் ஓழுக்க நெறி அறிவுரைகள்

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் இயங்கிவரும் சேர்மன் சாமிநாத முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்க நெறிமுறைகளை சிவ காஞ்சி காவல்துறை ஆய்வாளர் எடுத்துரைத்து முன்னேற்றம் காண அறிவுரை வழங்கினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : பள்ளி மாணவர்களுக்கு  காவல்துறையின் ஓழுக்க நெறி அறிவுரைகள்
X

மாணவர்களுக்கான ஒழுக்க நெறி அறிவுரை கூட்டத்தில் பேசிய காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் கல்லூரிகள் கடந்த 18 மாத காலமாக மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் சுழற்சிமுறையில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்து வகுப்புகள் துவங்கியது.

18 மாதகாலமாக ஆன்-லைன் மூலமாக கல்வி கற்று வந்த நிலையை மாணவர்கள் தற்போது பள்ளிக்கு வருவதால் ஒழுக்க நெறி மற்றும் கொரோனா பரவல் தடுப்பு விதி முறைகளை கடைப்பிடிப்பது குறித்த நன்நெறி அறிவுரை கூட்டம் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள சேர்மன் சாமிநாத முதலியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு பள்ளி மாணவர்கள் ஒழுக்க நெறியுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் நெறி தவறும் நிலையில் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்வி கற்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

மாணவர்கள் பெற்றோர்களின் கனவையும் தங்களின் இலட்சியத்தையும் திறம்பட எட்ட ஒழுக்கம் மிகவும் அவசியம் எனவும் அதை கட்டாயம் மாணவர்கள் பின்பற்றி குற்ற செயல்களை தவிர்த்து சிறப்பான மாணவர்கள் என பெயர் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் திருவேங்கடம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பட விளக்கம : பிள்ளையார்பாளயம் சேர்மன் சாமிநாத முதலியார் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான ஒழுக்க நெறி அறிவுரை கூட்டத்தில் பேசிய காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு.

Updated On: 22 Sep 2021 3:00 PM GMT

Related News