காஞ்சிபுரம் சித்த மருத்துவர்கள் அசத்தல்! 20 நாளில் 194 பேர் குணம்!!

காஞ்சிபுரத்தில் அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 20 நாட்களில் 194 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காஞ்சிபுரம் சித்த மருத்துவர்கள் அசத்தல்! 20 நாளில் 194 பேர் குணம்!!
X

காஞ்சிபுரம் சித்த மருத்துவப் பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா முத்திரை கற்றுத் தரும் கவச உடை அணிந்த சித்த மருத்துவர்,

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சார்பில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.

மையம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 232 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 194 பேர் 20 நாட்களில் குணமடைந்து விட்டதாகவும், எஞ்சிய 38 பேர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு காலையில் மஞ்சள்பொடி, உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தல், மூலிகை தேநீர், எட்டு வடிவ நடைபயிற்சி, உடற்பயிற்சிகள், வர்மம் மற்றும் கைவிரல்களால் நோயை குணப்படுத்த கூடிய முத்திரைப் பயிற்சிகள், கபசுரக் குடிநீர் ஆகியன வழங்கப்படுகின்றன.

மாலையில் சுவையின்மைக் குறைவை போக்க ஓமப்பொட்டலம் நுகர்தல், தேன் கலந்த ஆரோக்கிய பானம், 3 வேளையும் உணவு, நெல்லிச்சாறு ஆகியனவும் வழங்கப்படுகிறது. குணமடைந்து வீடுகளுக்கு திரும்புவோருக்கும் நெல்லிக்காய் லேகியம், உடல் வலியை நீக்கும் அமுக்கரா சூரண மாத்திரை ஆகியன அடங்கிய மருந்துப் பெட்டகமும் கொடுத்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Updated On: 6 Jun 2021 11:30 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி
 2. தேனி
  கஞ்சா விற்ற இரு வியாபாரிகள் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது
 3. அரியலூர்
  அரியலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
 4. விளையாட்டு
  இங்கிலாந்து டெஸ்ட்: உலக சாதனை படைத்த பும்ரா
 5. காஞ்சிபுரம்
  காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி: காஞ்சிபுரம் மாவட்ட...
 6. கிணத்துக்கடவு
  மதுக்கரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்.. 'நட்பூ' போற்றும் விழா..!
 7. புதுக்கோட்டை
  தலைமுடியால் வேனை இழுத்து சாதனை படைத்த மாணவிக்கு அமைச்சர் மெய்யநாதன்...
 8. புதுக்கோட்டை
  அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு ஆக.27, 28 -ல் புதுக்கோட்டையில்...
 9. இந்தியா
  மகாராஷ்டிரத்தில் ஷிண்டே அரசு ஜூலை 4 ல் பெரும்பான்மை நிரூபிக்க...
 10. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 பொறியியல் கல்லூரிகள்