/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறை அலுவலர்கள் பணியிட மாற்றம் எப்போது?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2ஆண்டுகளாக காவலர் முதல் அதிகாரிகள் வரை பணியிட மாற்றம் நடைபெறவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறை அலுவலர்கள் பணியிட மாற்றம் எப்போது?
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ( கோப்பு படம்).

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலர்கள் முதல் உயர் அலுவலர்கள் வரை கடந்த இரண்டு ஆண்டுகளாக இடம் மாற்றம் செய்யப்படவில்லை என்பதும், காவல் துறையினர் ஆண்டுதோறும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலையில் தொடர்ந்து காவலர்கள் பணிபுரிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதனை கண்காணிப்பதற்காக இரண்டு உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இது மட்டும் இல்லாமல் இரண்டு போக்குவரத்து காவல் அலுவலகங்களும் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் இயங்கி வருகிறது. இதில் மொத்தம் 250க்கும் மேற்பட்ட காவலர்கள் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையங்கள் எல்லைகள் அதிக கிராமங்களை கொண்டது. ஒரு கிராமம் பகுதியில் பிரச்னை ஏற்படும் நிலையில் அதை தீர்க்க செல்லும் காவலர்கள் மற்றொரு முனையில் பிரச்னை ஏற்பட்டால் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் நிலையில் அதற்குள் அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்குமா என்பதும் ஒரு நிகழ்வாக உள்ளது.

ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் குறைந்தபட்சம் 30 காவலர்கள் தேவைப்படும் நிலையில் இது போன்ற காவல் நிலையங்களுக்கு 50க்கும் மேற்பட்ட காவலர் பல்வேறு நிலையில் தேவைப்படுகிறார்கள்.

இதில் பாதி அளவே காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தொடர்ச்சியாக பணி செய்யும் நிலையும் ஏற்படுகிறது. வார விடுமுறை என்பது தற்போது இவர்களுக்கு இல்லை என்பது உண்மையாகவே உள்ளது.

மேலும் ஒரே காவல் நிலைய எல்லைக்குள் பணிபுரிவதால் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக கலால்த்துறை என கூறப்படும் மது விலக்கு பிரிவு அலுவலர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பணிகளில் ஈடுபடுவதால் குற்றவாளிகளிடம் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறையின் இடம் மாறுதல் குறித்த விருப்ப கூட்டம் கூட நடைபெறுவதில்லை எனவும் , இடம் மாறுதல் இல்லாமல் பணிபுரிந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து அரசியல் கூட்டங்கள், போக்குவரத்து பணிகள், குற்றவாளிகளை கண்காணிப்பது என பல வேலைகளுக்கிடையே பொதுமக்களின் மனுக்களையும் விசாரணை மேற்கொள்வது பெரும் கால தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

விரைவாக புதிய காவலர்களை நியமிப்பதும், காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து நிலை காவலர்களையும் இடம் மாற்றம் செய்து புதிய புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.

காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் பலர் பல்வேறு பிரிவுகளுக்கு எவ்வித உத்தரவும் இல்லாமல் வாய்மொழி உத்தரவாக பணிபுரிவதும், புதிய வேலை இல்லாத துறைகளில் அதிக காவல்துறையினர் பணிபுரிவது தற்போது நடைபெற்று வருவதாகவும் நடைமுறையில் உள்ளதாக சில காவலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

Updated On: 25 Jan 2023 7:47 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!