/* */

சிசிடிவி கேமராக்கள் அமைப்பதில் காஞ்சிபுரம் முன்னோடி - ஐ.ஜி. பிரேம் ஆனந்த்சின்ஹா

சிவ காஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லவர்மேடு பகுதியில் புறக்காவல் நிலைய மற்றும் 51 சிசிடிவி கேமரா கண்காணிப்பு துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

சிசிடிவி கேமராக்கள் அமைப்பதில் காஞ்சிபுரம் முன்னோடி - ஐ.ஜி. பிரேம் ஆனந்த்சின்ஹா
X

சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லவேறும் மேடு பகுதியில் புற காவல் நிலையத்தை திறந்து வைத்த வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்காணிக்கும் பொருட்டும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

கடந்த 10 மாதத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 1383 கேமராக்கள் உட்பட மொத்தம் மாவட்டம் முழுவதும் 4584 கேமராக்கள் பொருத்தி உள்ளது. இது தவிர முக்கிய குற்ற சம்பவங்கள் மிகவும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லவர் மேடு பகுதியில் சுமார் 3.5 லட்சம் மதிப்பில் புற காவல் நிலையம் கட்டிடம் , 15 லட்சம் மதிப்பில் 51 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு அதனை இன்று வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் காஞ்சி சரக காவல்துறை துணை தலைவர் எம் சத்யபிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

துவக்க விழாவில் பேசிய ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா , வடக்கு மண்டலம் சரக்கத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சிசிடிவி கேமரா பொருத்துவதில் முன்னோடியாக திகழ்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இனிவரும் காலங்களில் காவல்துறைக்கு முக்கிய தடையங்களாக இருப்பதும் குற்ற நிலை தடுக்க உதவும் சிசிடிவி கேமராவே எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகள் , நகர் மற்றும் கிராம பகுதிகளில், சிசிடிவி பயன்பாட்டை அறிந்து அதை அமைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் காஞ்சி கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், ஆய்வாளர்கள் விநாயகம், வெங்கடேசன், திவான், மற்றும் மாமன்ற உறுப்பினர் மௌலி சசிகுமார், கட்டிடம் அமைக்க உதவிய பொறியாளர் பரணிதரன், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 May 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  2. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  3. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  4. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  5. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  6. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  7. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  8. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  9. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  10. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...