/* */

களைகட்டும் காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தல்

மாமியார்-மருமகள் போட்டி, கணவன்-மனைவி போட்டி என காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தல் களைகட்டியுள்ளது

HIGHLIGHTS

களைகட்டும் காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தல்
X

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இதையொட்டி, ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த சாவித்திரி மணிகண்டன் (42) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அவரது மாமியார் ஜெயலட்சுமி லோகநாதன் (56), வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரே நேரத்தில் மாமியாரும், மருமகளும் வேட்புமனு தாக்கல் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

அதேபோல், வாலாஜாபாத் ஒன்றியம் நத்தாநல்லூர் ஊராட்சி பொது இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மணி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவரை எதிர்த்து, அவரது மனைவி ராணி போட்டியிடுகிறார். ஒரே நேரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் கணவன் - மனைவி நேருக்கு நேர் போட்டியிடுவது வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 Sep 2021 4:38 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?