/* */

காஞ்சிபுரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் , 13 லட்சத்து 38 ஆயிரத்து 654 வாக்காளர்கள் உள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
X
காஞ்சிபுரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று வெளியிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 க்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆர்த்தி காலை வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாமன்ற உறுப்பினர் சுதா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அ.தி.மு.க.சார்பில் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் , கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேரு, தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன், மாநகர செயலாளர் ஏகாம்பரம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூறியதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நிலவரப்படி இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் மொத்த வாக்காளர்கள் 13 லட்சத்து 38 ஆயிரத்து 654 பேர் எனவும் இதில் ஆண் வாக்காளர்கள். 6, 51,480 எனவும், பெண் வாக்காளர் எண்ணிக்கை 6,86,994 எனவும் இதர வாக்காளர்கள் 180 பேர் உள்ளனர்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 702 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 62,443 பெண் வாக்காளர்கள் , இதர வாக்காளர்கள் 20 பேர் என 3,14, 165 வாக்காளர்கள் உள்ளனர்.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 282 நான் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 80 பெண் வாக்காளர்களும் 43 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 405 வாக்காளர்கள் உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் தனி சட்டமன்ற தொகுதியில் 1,79,638 ஆலந்தூர்தொகுதியில் அதிகபட்சமாக மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 251 வாக்காளர்களும் உத்திரமேரூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 2,68, 405 வாக்காளர்களும் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற நான்கு சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 24 ஆயிரத்து 986 பேர் புதிய வாக்காளர்களாகவும், 8,484 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் 1500 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்கு சாவடி மையங்களை சீரமைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி ஸ்ரீபெரும்புதூர் தனி சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக ஒரு வாக்கு சாவடி மையம் ஏற்படுத்தப்பட்டு தற்போது மொத்தம் காஞ்சிபுரத்தில் 1394 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.

Updated On: 5 Jan 2023 7:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!