வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..

வெளிநாட்டிற்கு வேலை செல்வோர் கவனிக்க வேண்டிய விவரங்கள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி. (கோப்பு படம்).

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுபான்மை நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழக தொழிலாளர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்து உள்ளது என்றும் கடந்த 18 மாதங்களில் 1200 பேர் உதவி கேட்டதின் பேரில் தமிழக அரசால் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும், வெளிநாடு வேலை செல்வோரை தேர்வு செய்ய 118 பதிவு செய்த நிறுவனங்கள் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இதுகுறித்த ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைகள் பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், வெளிநாடுகளில் வேலைக்கு அனுப்பவரிடம் எச்சரிக்கையாக இருந்து உண்மை தன்மையை உறுதி செய்து கொண்ட பின்னர் செல்ல வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்வு விவரம் வருமாறு:

உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, கம்போடியா, மியான்மர் நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவர்களை ஏமாற்றி அழைத்து சென்று சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர் புகார்கள் தமிழக அரசு சார்பில் தரப்பட்டு வருகிறது.

இதனை தவிர்க்க வெளிநாடு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள் என்ன வகையான பணி மற்றும் பதிவு செய்த நிறுவனங்களாக உள்ளதா? என்பதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

இதுகுறித்த விவரங்கள் தெரியாவிட்டால் தமிழக அரசையோ அல்லது சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களையோ தொடர்பு கொண்டு அதன் உண்மை தன்மையை அறியலாம். மேலும், வெளியுறவுத் துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளில் உள்ள தூதரங்களின் இணையதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகளின் படி வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல வேண்டும் என இதில் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால், அழகு தமிழர் நலத்துறை கைபேசி எண்களான 9600023645, 8760248625 மற்றும் தொலைபேசி எண் 044 - 28515288 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

கடந்த சில வருடங்களாகவே வெளிநாடுகளுக்கு பணிக்கு சென்று விட்டு அங்கு பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதும் , பணிக்கு செல்ல பணம் அளித்து ஏமாற்றும் அடைவதும் தொடர்ந்து வாடிக்கையாகி வரும் நிலையில் இது போன்ற தொலைபேசி எண்களை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் தங்க குடும்பத்தினரின் அச்சத்தையும் போக்க தமிழக அரசு அறிவித்த அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 24 Nov 2022 1:15 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..
 3. மதுரை மாநகர்
  இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
 4. விராலிமலை
  கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி: ஜனநாயக மாதர் சங்கம்...
 5. துறைமுகம்
  கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
 6. சென்னை
  திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம்...
 7. புதுக்கோட்டை
  வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப்...
 8. சென்னை
  தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது...
 9. சிவகாசி
  விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  விழிஞ்சம் துறைமுகத்தில் மத்தியப் படை பாதுகாப்பு கோரி அதானி குழுமம்...