/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கையொப்பமிட்டு உறுதி ஏற்பு

காஞ்சிபுரம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மனித கழிவுகளை எடுப்பதற்கு செல்லமாட்டோம் என கையொப்பமிட்டு உறுதி மொழி ஏற்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்  கையொப்பமிட்டு உறுதி ஏற்பு
X

அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் படித்த உறுதி மொழி படிவம்.

தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை முற்றிலும் ஒழித்து விட்ட நிலையில் , பல்வேறு பகுதிகளில் பெரிதும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனங்கள் அழைக்கும் போது சென்று பணியில் ஈடுபட துவங்கும் போது விஷவாயு தாக்கி விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி கடந்த வாரம் இதுபோன்று செயலில் ஈடுபட்டு ஊழியர்கள் இறக்கும் நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கேளிக்கை ஓட்டலில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த மூவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு ஓட்டல் மேலாளர் மற்றும் கழிவுநீர் அகற்ற பணி ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் உரிமையாளர் தற்போது வரை தலைமறைவாகவே உள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆலோசனைப்படி மாநகராட்சி சார்பில் இது குறித்த எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டு பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியின்‌ மூன்று மண்டலங்களில் பணிபுரியும் 150 க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்கள் , 350 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களிடம் உறுதிமொழி ஏற்று கையொப்பம் பெறப்பட்டுள்ளது.

இந்த உறுதிமொழி பத்திரத்தில் , மனித கழிவுகளை மனிதனே அகற்றும் பணிக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 மற்றும் விதிகள் படி மனித கழிவுகளை நேரடியாக கையாள்வதோ, சுத்தம் செய்வதோ, எடுத்துச் செல்வதோ, அப்புறப்படுத்துவதோ, சுகாதார குறைபாடான கழிப்பிடங்களில் சுத்தம் செய்வதோ பராமரிப்பது நச்சு தடை தொட்டி மற்றும் ஆழ் இறங்கு குழி ஆகியவற்றில் இறங்கி சுத்தம் செய்வது போன்ற செயல்களை மேற்கட்ட சட்ட விதிகளின்படி குற்றம் என்பதை விளக்கி கூறியதை நான் நன்கு தெளிவாக படித்தும் , செவியுற கேட்டும் அறிந்து கொண்டேன்.

எனவே நானும் அல்லது எனது குடும்பத்தை சார்ந்தவர்களோ எவரும் மேற்கண்ட மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியில் ஈடுபடமாட்டோம் என சுய நினைவுடன் ஒரு முழு மனதாக உறுதி அளிக்கிறேன் என கூறி கையொப்பமிட்டுள்ளனர்.

மேலும் இதுபோன்று ஒப்பந்ததாரர்களிடமும் உறுதிமொழி பத்திரம் அரசு விதிகளை பின்பற்றி நடப்பேன் எனவும் எக்காரணம் கொண்டும் மனிதர்களை இதற்கு பயன்படுத்த மாட்டேன் என கையெழுத்திட்டு உறுதியளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதை வடிகால்களை சரி செய்ய நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தனியார் அமைப்பின் மூலம் ரொபான்டிக் இயந்திரம் கொண்டு சுத்தம் செய்வது குறித்த செய்முறை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Oct 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்