Begin typing your search above and press return to search.
கச்சபேஸ்வரர் கோயில் உண்டியலில் ரூ 7.64 லட்சம் பக்தர்கள் காணிக்கை
காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள 4 உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணிக்கை.
HIGHLIGHTS

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் மண்டபத்தில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படும் காட்சி
கோயில் நகரமான காஞ்சிபுரத்தின் மத்தில் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள 4 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) ஜெ.பரணிதரன், காஞ்சிபுரம் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர் ஜெ.ப.பூவழகி, மேலாளர் சுரேஷ், மண்டல துணை வட்டாட்சியர் கு.அரி ஆகியோர் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.7 லட்சத்து 64 ஆயிரத்து 869 , தங்கம்- 15 கிராம்,வெள்ளி - 242 கிராம் ஆகியவை பக்தர்களின் காணிக்கையாகக் கிடைத்தது.