/* */

காஞ்சிபுரத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலவாரியம் சார்பில் நிதியுதவி

காஞ்சிபுரத்தில் நடந்த விழாவில் நல வாரிய தலைவர் வாகை சந்திரசேகர் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலவாரியம் சார்பில் நிதியுதவி
X

மறைந்த நாட்டுப்புறக் கலைஞரின் குடும்பத்திற்கு ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவர்  வாகை சந்திரசேகர்  வழங்கினார்.    உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன்.

தி.மு.க. ஆட்சியில் கலைகளும் கலைஞர்களும் பாதுகாக்கப்படுவார்கள் என இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவர் வாகை.சந்திரசேகர் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்க மற்றும் மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய சங்க தலைவர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை 3 நபர்கள், காஞ்சிபுரம் 19 நபர்கள், செங்கல்பட்டு 3 நபர்கள் , திருவள்ளூர் 9 நபர்கள் , திருப்பத்தூர் 10 நபர்கள், வேலூர் 12 நபர்கள் , ராணிப்பேட்டை 14 நபர்கள்் , திருவண்ணாமலை76 நபர்கள் என 8 மாவட்டங்களை சேர்ந்த 150 நாட்டுப்புற கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை அணிகலன்கள் வாங்க தலா பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஐந்து நாட்டுப்புற கலைஞர்களை இழந்து தவிக்கும் 5 குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசனுடன் இணைந்து வழங்கினார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் , தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் நபர்களுக்கு மண்டல வாரியாக நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது .இது மட்டும் இல்லாமல் நாட்டுப்புற கலைஞர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறபட்டு அது குறித்து தீர்வு காணப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் உள்ள நிலையில் 50 ஆயிரம் பேர் மட்டுமே அடையாள அட்டை பெற்றுள்ளனர். அடையாள அட்டை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க தமிழக அரசிடம் சில மாற்றங்களை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் இரண்டு லட்சம் பேர் நல வாரியத்தில் இணைக்கப்படுவார்கள்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் உதவிதொகை ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு ஒரு லட்சம் நிதியாக அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இயல் இசை நாடக மன்றத்திற்கு ஒரு கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் , தற்போது முதல்வர் ஸ்டாலின் மூன்றரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சங்கீத நாடக சபா என்ற இருந்த பெயரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என மாற்றப்பட்டு அதற்கான பராமரிப்பு செலவுக்கு ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தி.மு.க. ஆட்சியில் கலைகள் மற்றும் கலைஞர்கள் பாதுகாக்கப்படுவார்கள் எனவும், கலைஞர்களின் குழந்தைகள் உயர் கல்வி கற்கவும் , ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் அவர்களுக்கான பயிற்சி மையம் சென்னையில் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலாளர் விஜயா தாயன்பன் , சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , எழிலரசன் , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் கலைப் பண்பாட்டு துறை அதிகாரிகள் கலைஞர்கள், மாவட்ட பல்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Jan 2023 8:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?