தேவரியம்பாக்கத்தில் அதிகளவில் அரிய வகை மருத்துவ குணம் கொண்ட செங்காந்தள் மலர்

Gloriosa Superb In Tamil - புற்றுநோய், வாதநோய் , மூட்டு வலி மற்றும் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ தேவைகளுக்கு இதன் அனைத்து பாகங்களும் பெரிதும் உதவுகிறது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேவரியம்பாக்கத்தில் அதிகளவில் அரிய வகை மருத்துவ குணம் கொண்ட செங்காந்தள் மலர்
X

வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில் பல்வேறு நோய்களுக்கு உதவும் மருத்துவ குணம் கொண்ட செங்காந்தாள் மலர்.

Gloriosa Superb In Tamil - செங்காந்தாள் மலர் குறித்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மலர் பொதுவாகவே ஆப்பிரிக்கா , ஆசிய கண்டங்களில் காணப்படும். பொதுவாகவே இந்த பூ வேலிகள் மட்டுமல்ல சாலையோரங்கள் மற்றும் காடுகளில் படர்ந்து வளரக்கூடியது.

இதன் மலரை பார்கையில் அழகிய விரல்கள் போல் அமைந்து சுடர் போல் காட்சியளிக்க கூடிய இந்த மலரின் அனைத்து பாகங்களும் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்றாகும். இந்த பூ பல்வேறு நிலைகளில் தன் நிறத்தை மாற்றிக் கொண்டு பூப்பதால் இதை செங்காந்தாள் மலர் என்றும் கூறுகின்றனர்.

இதில் தேன் சுவை அதிகம் இருப்பதால் எப்போதுமே இப்பூவில் வண்டுகள் குருவி என பல தேனை சுவைத்து உண்டு மகிழ்ந்து உண்ணும். இந்த செங்காந்தாள் மலர் புற்று நோய் பரவாமல் தடுக்க நல்ல ஒரு மருந்தாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் பாம்புகடி , தேள்கடி உள்ளிட்ட விஷக்கடிக்கு சிறந்த முறிவு மருந்தாக உதவுவதாக கூறப்படுகிறது.

வாத நோய், மூட்டு வலி , தொழு நோய் பால்வினை , வெண்குஷ்டம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்து செங்காந்தள் மலர். அவ்வகையான செங்காந்தாள் மலர் வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் அதிகம் காணப்படுவதாக அக்கிராம ஊராட்சி மன்ற தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான அஜய்குமார் கண்டறிந்துள்ளார்.

மேலும் இப்பூவை தொடர்ந்து பார்த்தால் கண் வலி வரும் என்பது பழைய காலத்தில் இருந்து கூறப்படுவதால் இதை பொதுமக்கள் அதிக அளவில் இதுகுறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்ளாதது ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆறு மாத காலமாக அப்பகுதியில் ஆய்வு செய்த போது மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் அதிக அளவு இந்த செங்காந்தள் மலர் உள்ளதை கண்டறியப்பட்டு அதனை பாதுகாக்க தற்போது முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிக நோய்களை தீர்க்கக் கூடிய இந்த செங்காந்தள் மலர் இனிவரும் காலத்தில் ஆவது பாதுகாத்து பல்வேறு நோய்கள் தீர இதை பயன்படுத்துவோம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-08-08T15:36:49+05:30

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் 24 மணி நேரம் செயல்படும் கருடா ஸ்கேன் சென்டர் திறப்பு
 2. குமாரபாளையம்
  வல்வில் ஓரி விழாவில் இருதரப்பினர் மோதல் வழக்கில் சமரசம்
 3. சினிமா
  தேசிய விருதை கிண்டலடித்தாரா பார்த்திபன்...?
 4. குமாரபாளையம்
  பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு...
 5. குமாரபாளையம்
  மகன்களால் கைவிடப்பட்ட 81 வயது மூதாட்டி குமாரபாளையம் போலீசில் புகார்
 6. குமாரபாளையம்
  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், இரண்டாவது கணவர் போக்சோவில்...
 7. டாக்டர் சார்
  livogen Z tablet uses in tamil ரத்த சோகை நோய்க்கான லிவோஜன் Z...
 8. புதுக்கோட்டை
  விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர் துவக்கப்பள்ளி...
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா
 10. கோவை மாநகர்
  கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை