சமூக சேவகர் பழனிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

கோவிட் 19 காலங்களில் செங்கை பகுதிகளில் சிறப்பான சேவை செய்த சமூக சேவகர் பழனிவேல் என்பவருக்கு இந்திய எம்பயர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சமூக சேவகர் பழனிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
X

சமூக சேவகர் பழனிவேலுக்கு டாக்டர் பட்டம்

தமிழக பாரம்பரிய மருத்துவ சங்க பொதுச்செயலாளரான செங்கல்பட்டு வே.பழனிவேலன் என்பவருக்கு இந்திய எம்பயர் பல்கலைக்கழகம் (IEU, அமைதி பிரிவு) பாரம்பரிய மருத்துவம் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவிப்பதற்கான பணிகளுக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

யுனிவர்சல் டெவலப்மெண்ட் கவுன்சில் உடன் (UDC) இணைந்து, நிதி ஆயோக் இந்திய அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பின் வாயிலாக, சமீபத்தில் ஓசூரில் நடைபெற்ற விழாவில் பாரம்பரிய மருத்துவத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றார்.

மேலும் இவர் தமிழ்நாடு மருந்தாளுனர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளராகவும் உள்ளார்.

கோவிட் 19 முதல் இன்றைய காலகட்டம் வரை செங்கை பகுதிகளில் பாரம்பரிய மருத்துவ அடிப்படையில் தயார் செய்யப்பட்ட மருந்து பெட்டகங்களை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.

மேலும், குளோபல் ஸ்ரீ சாய் சேவா பரிவார் அமைப்பின் சென்னை மண்டல தலைவராக இருந்துகொண்டு ஆதரவின்றி தெருவோரப் பகுதிகளில் வசித்து வரும் முதியோர்களுக்கு வாரத்தில் மூன்று தினங்கள் இலவச உணவுகளை வழங்கி வருகிறார்.

We care Chengalpattu எனும் அமைப்பின் வாயிலாக செங்கை நகர வளர்ச்சி திட்டங்களுக்கு உதவி புரிந்து வருகிறார் . சென்னை அரிமா சங்க அமைப்பின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் மக்களுக்கு சமூக பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார் .

பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகளில் சமூக ஆர்வலராக இருந்துகொண்டு விளிம்புநிலை சமூகங்களின் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

Updated On: 23 Jan 2022 3:15 PM GMT

Related News