117 ஷவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது
HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா காஞ்சிபுரத்தில் உள்ள உணவகத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் கலப்படம் குறித்து ஆய்வு செய்தபோது
நாமக்கல் பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.அனுராதா காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கலில் 13 வயது பள்ளி சிறுமி ஷவர்மா உணவு அருந்தியதில் உயிரிழந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பொதுவாகவே உணவகங்களில் உணவுப் பொருட்களை பல நிலைகளில் பாதுகாத்து மீண்டும் அதை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருவதால் அதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கீழே சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறைக்கு அறிவுறுத்தி உடனடியாக உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.அனுராதா அன்னை இந்திரா காந்தி சாலை , கிழக்கு ராஜ வீதி, காமராஜர் வீதி , காமாட்சி அம்மன் சந்நிதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் ஷவர்மா உணவகங்கள் மற்றும் அசைவ உணவுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது உணவகங்களில் சமையல் கூடம், உணவுப்பதப்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டி , வாடிக்கையாளர்களுக்கு அளிக்க தயாரிக்கப்பட்டிருந்த சில உணவு மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பதிட்டமிட்டுள்ளார்.
மேலும் உணவகங்களில் இருந்த பயன்படுத்தக் கூடாத உணவுகளை பறிமுதல் செய்து அதை கிருமி நாசினிகள் கொண்டு அழித்து பறிமுதல் செய்தார்.உணவு பாதுகாப்பு அதிகாரி உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட நிலையிலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்து கொண்டு உண்டும் மகிழ்ந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு நான்கு உணவுகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்படும் 23 உணவகங்களில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மூன்று உணவகங்களுக்கு ரூ 6 ஆயிரம் ரூபாய் அபராதமும், பயன்படுத்தக் கூடாத வகையில் இருந்த 28 கிலோ உணவுப் பொருட்களையும் டாக்டர் அனுராதா பறிமுதல் செய்தார்.
இதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 62 உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு ஏழு உணவுகளுக்கு தரம் குறித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 49 உணவகங்களில் உணவு மாதிரிகள் ஆய்வுக்கு சேகரிக்கப்பட்டும், இரண்டு கடைகளுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தும், உணவுக்கு பயன்படுத்தக் கூடாத 26 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தனர்.