அ.தி.மு.க பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தான் வரனும்: காஞ்சியில் தமிழ்மகன் உசேன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை..!

அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் வர வேண்டும் என, காஞ்சிபுரம் தர்காவில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொண்டர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அ.தி.மு.க பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தான் வரனும்: காஞ்சியில் தமிழ்மகன் உசேன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை..!
X

பெரிய காஞ்சிபுரம் ஹமீது அவுலியா தர்காவில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்த அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள்.

சென்னையில், வானகரம் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டம் மிகுந்த பரபரப்புக்கு இடையே கூட்டப்பட்டது. இதில், கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க ஒற்றை தலைமையாக முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்யவும், அவரையே பொதுச் செயலாளராக நியமிக்கவும் நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.

அடுத்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நிறைவுக்கு வந்தது. இதற்கிடையில், அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பெரிய காஞ்சிபுரம் அமீது ஹவுலியா தர்காவில் சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஈடுபட்டார். அப்போது, கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்னைகள் தீரவும் , தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் விரும்பும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படவும் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

பிரார்த்தனை நிகழ்ச்சியில், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி மற்றும் வள்ளிநாயகம், கே.யு.எஸ்.சோமசுந்தரம் , ஜீவானந்தம் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Updated On: 26 Jun 2022 1:45 PM GMT

Related News