Begin typing your search above and press return to search.
ஏனாத்தூர்: ஆபத்தான நிலையில் தேசியக்கொடி ஏற்ற கம்பத்தில் ஏறிய மாணவன்
ஏனாத்தூரில் ஆபத்தான நிலையில் மாண தேசியக்கொடி ஏற்ற கம்பத்தில் ஏறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS

ஏனாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆபத்தான நிலையில் தேசிய கொடி கம்பத்தில் ஏறும் நிகழ்வு.
தமிழகம் முழுதும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பள்ளி வேலை நாட்களில் பள்ளி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி காலை இறைவணக்கம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் ஏனாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவ்வழக்கத்தில் உள்ள கம்பத்தில் தேசிய கொடி ஏற்ற மாணவர் ஒருவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் யாரும் உடன் உதவி இன்றி கம்பத்தில் ஆபத்தாக ஏறி கயிறு நுழைக்கும் நிகழ்வு அதிர்ச்சி அளித்துள்ளது.
இதை பள்ளி நிர்வாகம் கவனிக்காததும், ஏதேனும் விபரீதம் நிகழ்வு நிலையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதும் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.