/* */

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி அவசர கூட்டம்

மாண்டஸ் புயல் தொடர்பாக மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அவசர கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி அவசர கூட்டம்
X
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அவசர கூட்டம் நடைபெற்றது.

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வங்கக் கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தமானது மாண்டஸ் புயலாக இன்று உருவாகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்து பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாலை வலுப்பெற்றது.

சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 8 மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் நாளை மறுநாள் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பேரிடர் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் குழுவினருக்கு தகுந்த அறிவுரைகள் மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பொதுப்பணித்துறை, சுகாதார துறை,மின்சாரத் துறை,காவல் துறை,தீயனைப்பு துறை,உள்ளிட்ட பல்வேறு துளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மேயர் மகாலட்சுமி பேசுகையில்,மாண்டஸ் புயல் உருவாகுவதால் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்,சாயும் தருவாயில் உள்ள பழமையான மரங்கள்,மின்கம்பிகள் அருகில் உள்ள மரங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும், சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் காற்றினால் கீழே விழும் பாதிப்பு உள்ளதால் அதனை அகற்றவும்,குடிசை மற்றும் இடியும் தருவாயில் உள்ள கட்டிடங்களில் தங்கும் மக்களை பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கவும்,மின் அழுத்ததால் கால்நடைகள் உயிரிழக்காமல் இருக்க மின்கம்பங்களில் முனைய பெட்டி(terminal box)பொருத்தப்பட்டுள்ளதைக் குறித்தும் அனைத்துத்துறை அதிகாரிகளிடம் ஆலோசிக்கப்பட்டது.

மேலும்,பொதுமக்கள் பேரிடர் காலத்தில் மாநகராட்சியை தொடர்பு கொள்ள 24மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசி எண் உபயோகத்தில் இருக்கும், எந்த நேரத்திலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நமது பகுதியில் ஏற்படும் பாதிப்பு குறித்து உடனடியாக ஆணையர் மற்றும் மேயரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன், மண்டல குழு தலைவர்கள், அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து வட்டாட்சியர்களுக்கும் மாண்டஸ் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நிலையில் காற்றின் வேகம், சீற்றம் கடல் பகுதியில் அதிகரித்து வருவதாகவும் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On: 7 Dec 2022 1:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  2. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  5. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  6. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  7. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
  9. நாமக்கல்
    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  10. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!