/* */

அதிமுக வேட்பாளர்களை கடுப்பேற்றிய தேர்தல் அலுவலர்கள்

காஞ்சிபுரம் ஊராட்சி தேர்தலில் வெற்றி குறித்த அறிவிப்பு, வாக்குகள் எண்ணுதல் உள்ளிட்டவைகளில் அதிமுகவினரை வெறுப்பேற்றிய தேர்தல் அதிகாரிகள்

HIGHLIGHTS

அதிமுக வேட்பாளர்களை கடுப்பேற்றிய தேர்தல் அலுவலர்கள்
X

அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபோது 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு நேற்று காலை வாக்கு எண்ணிக்கை பணி 7 மணிக்கு தொடங்கியது.

ஆரம்பம் முதலே திமுகவினர் 95 சதவீத இடங்களில் முன்னணியில் இருந்தனர். சில இடங்களில் அதிமுகவினர் முன்னிலையில் இருந்து வந்த நிலையில் பல்வேறு சிக்கல்கள் அலுவலர்களால் அதிமுகவினருக்கு ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு சின்னங்கள் தவறுதலாக முத்திரை பதிவு உள்ளிட்டவைகளுக்கு முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் , ஏதாவது ஒரு வகையில் அவர்களை டென்ஷனுடன் வைத்திருந்தனர்.

திருப்புக்குழி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக பெண் வேட்பாளர் 163 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றும், மூன்று மணி நேரமாக அவருக்கு சான்றிதழ் தயாரித்து வந்தனர். அதன் பிறகு அவர் கூச்சல் குழப்பம் இட்ட பின் அவருடன் போட்டியிட்ட வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார் இதனால் 20 நிமிடம் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அதன் பின் ஒருவழியாக சமாதானம் ஏற்பட்டு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் களக்காட்டூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் மனைவி சசிகலா கிராம வாக்குச்சாவடி பெட்டிகளில் எண்ணும்போது, அதிமுக வேட்பாளரின் முகவர் ஆட்சேபணை தெரிவித்தும், அலட்சியமாக செயல்பட்ட தேர்தல் அலுவலர்களால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இன்று பல சம்பவங்களில் அதிமுகவினரை வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் அலுவலர்கள் கதறவிட்ட சம்பவங்கள் அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. .இதேபோல் பாமகவினர் வெற்றி பெற்ற சான்றிதழ் வழங்குவதிலும் கடும் சிரமம் ஏற்பட்டு முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நேற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது

Updated On: 13 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?