/* */

காஞ்சிபுரம் அண்ணாநகர் பகுதியில் புதிய நியாய விலைக் கடை திறப்பு.. எழிலரசன் எம்எல்ஏ பங்கேற்பு..

காஞ்சிபுரம் அண்ணாநகர் பகுதியில் புதிய நியாயவிலைக் கடையை எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அண்ணாநகர் பகுதியில் புதிய நியாய விலைக் கடை திறப்பு.. எழிலரசன் எம்எல்ஏ பங்கேற்பு..
X

நியாய விலை கடையினை எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

தமிழக அரசின் கூட்டுறவு துறை மூலம் இயங்கி வரும் நியாய விலை கடைகளில் 1500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ள கடைகளை பிரித்து பகுதி நேர நியாய விலை கடைகளை உருவாக்க அறிவுறுத்தப்பட்டது. பகுதி நேர கடைகள் உருவாக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமமின்றி அனைத்து பொருட்களும் பெற இயலும் என்பதும் இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த பயன் பெறுவார் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டுறவு துறைக்கு அறிவுறுத்தினார்.

அந்த வகையில், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோனேரிகுப்பம் ஊராட்சி காஞ்சிபுரத்தின் புறநகர் பகுதியாக அமைந்துள்ளதால் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் அண்ணா நகர், எச்.எஸ்.அவென்யூ, சரஸ்வதி நகர், பாலாஜி நகர், தேவி நகர், செல்வகணபதி நகர், மீனாட்சி நகர், பெருந்தேவி நகர், வேந்தன் நகர், ரமணா நகர், அய்யன் திருவள்ளுவர் நகர் போன்ற 25-க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.

அந்தப் பகுதி மக்கள் வையாவூர்-1. நியாயவிலைக் கடையில் பொருட்களை பெற்று வந்த நிலையில், கோனேரிகுப்பம் மற்றும் அண்ணாநகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், வையாவூர்-1 நியாயவிலைக் கடையில் அதிகப்படியான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதால் தங்களுக்கு பொருட்களை வாங்குவதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளதாகவும், தங்கள் நகரைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தனியாக பகுதி நேர நியாயவிலைக் கடையினை ஏற்படுத்தித் தருமாறும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோனேரிகுப்பம் மற்றும் அண்ணாநகர் பகுதி நல சங்கத்தின் மூலம் கோரிக்கை விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு இது குறித்து ஆய்வு மேற்கொண்டு சாத்தியக்கூறுகள் இருப்பின் அதனை பகுதி நேர கடையாக உருவாக்க நடவடிக்கை எடுக்கும்படி எழிலரசன் எம்எல்ஏ அறிவுரை வழங்கினார்.

அதன் அடிப்படையில், வையாவூர்-1 நியாயவிலைக் கடையின் கீழ் உள்ள 351 குடும்ப அட்டைகள் அந்தக் கடையில் இருந்து பிரிக்கப்பட்டு அண்ணாநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் செயல்படும் வகையில் பகுதி நேர கடை உருவாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இன்று திறந்து வைத்து, அந்தப் பகுதி மக்களுக்கு நியாய விலை கடை மூலம் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கும் பணியை தொடக்கி வைத்தார்.

மேலும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இந்தக் கிராம ஊராட்சி பகுதிக்கு தேவையான சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து தனக்கு அனைத்து விவரங்களுடன் அளிக்கும் நிலையில் தனது சட்டமன்ற தொகுதி கோரிக்கையின் போது இதனை கணக்கில் கொண்டு நிதி கேட்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், ஒன்றிய செயலாளர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் சைலஜா சேகர், ஒன்றியக் குழு உறுப்பினர் ராம்பிரசாத், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் மணி, சார் பதிவாளர் கல்யாணசுந்தரம், கூட்டுறவுத்துறை அலுவலர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Dec 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?