/* */

திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்

Dravida Model Training Camp at Kanchipuram

HIGHLIGHTS

திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை   கூட்டம்
X

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக, மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெற்ற  திராவிட மாடல் பயிற்சி பாசறை 

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக, மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை காஞ்சிபுரம் ஏ.கே.ஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது

நகர செயலாளர் சன்பிரான்ட் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ காஞ்சிபுரம் எம்.பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ ஏழிலரசன் , காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக் வரவேற்று பேசினார். இதில் திமுக தகவல்தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி. லெனின் ஆகியோர் கலந்து கொண்டு திராவிட மாடல் பயிற்சி முறை குறித்துப் பேசினார்கள்.

இதில் இன்றைய இளைஞர்களுக்கு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா , கலைஞர் ஆகியோர் இளைஞர்களுக்கு என்றுமே அவர்கள் திராவிட மாடல் மட்டுமல்ல ரோல் மாடலாக இருந்தவர்கள்.காஞ்சியில் பிறந்த பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது நேரு உள்பட அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்தவர் . அன்று அண்ணா போட்ட விதைதான் மாநிலங்களவை உரிமை இன்றும் நிலைத்து நிற்கிறது அங்கே வடக்கே, கிழக்கு-மேற்கு தெலங்கானா என இந்தியா முழுவதும் ஒலிக்கிறது.

கலைஞர் 13-முறை தோல்வி காணாத வெற்றி பெற்றவர். ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி, ஆகியோரையும் இனையாக அரசியல் செய்தவர். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் கவிதை உலகம், நாடக உலகம், இலக்கிய உலகம் ,அரசியல், நிர்வாக திறமை திரைப்படத்துறை, எந்த துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அனைத்து துறையிலும் சாம்பியனாக விளங்கியவர்.

95- வயது வரை மேன் ஆப் தி மேட்ச் இருந்து அரசியலில் களம் கண்டவர். இன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் செருப்பு அணிய முடியாது.கோவிலுக்கு செல்ல முடியாது சங்குகளின் மாடல் ஆனால் இன்று செருப்பு அணிய லாம் நமக்கு பிடித்த உடைகளை அணியலாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்த கருத்தரங்கில் கேட்கலாம்

மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக சிஏ சட்டம் வந்தபோது அந்த சட்ட நகலை ஏரித்து முதல் குரல் கொடுத்தவர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான்.ஆகவே திராவிட மாடலை நோக்கித்தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையினான அரசு மற்ற மாநிலங்களுக்கு ரோல்மாடலாக விளங்கி வருகிறார் .

நமது தமிழக முதல்வர் சமநீதி சமத்துவம் என்ற கொள்கையோடு நல்லாட்சி செய்து வருகிறார் அதற்கு இளைஞர்கள் ஆகிய நாம் துணை நிற்போம் எதற்கும் இளைஞர்களாக நீங்கள் பலியாகி விடக்கூடாது .இந்த சமூக நீதி சமத்துவ அரசுக்கு என்றும் நீங்கள் துணை நிற்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் ,நகர இளைஞரணி அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமான இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.


Updated On: 25 Jun 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  6. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  10. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...