/* */

காஞ்சிபுரம் கழிவுநீர் கால்வாய் உடைப்பால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம் மாமல்லன் நகர் கேடிஎஸ் மணி தெரு வில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் கழிவுநீர் கால்வாய் உடைப்பால்  விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
X

காஞ்சிபுரம் வட்டம், மாமல்லன் நகர் பகுதி அமைந்துள்ளது. இதன் பிரதான தெருவாக இருப்பது கேடிஎஸ் மணி தெரு, இது நகராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

இதன் மற்றொரு பகுதி கோனரிகுப்பம் ஊராட்சி கட்டுபாட்டில் உள்ளது. இப்பகுதியை சுற்றி சுமார் 1,000 குடும்பத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இவ்சாலை வழிதான் நகரை இணைக்கும் பிரதான சாலையாகவும் , நகராட்சி குப்பை கொட்டும் லாரிகள், கழிவுநீர், குடிநீர் லாரி அனைத்தும் செல்கின்றன .


இந்நிலையில் பாரளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய் கல்வெட்டு சுமார் ஒரு வார காலத்திற்கு முன்பு சாலை நடுவில் ஓட்டை விழுந்து பழுதடைந்துள்ளது.

இது தொடர்பாக புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு வயதான முதியவர் பழுதடைந்துள்ள அந்த சாலையில் கால் தவறி விழுந்து விபத்துக்குள்ளானர்.

நேற்று இரவு பெய்த கனமழை மால் சாலையில் நீர்தேங்கியதில் சாலை பழுது தெரியாததால் அதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் விழுந்து விபத்தில் சிக்கினார்.

தற்பொழுது மக்கள் அனைவரும் பழுதடைந்துள்ள சாலையின் இருபுறங்களிலும் இரண்டு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

எந்த நேரத்திலும் முழுவதுமாக உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதில் சிக்கமால் இருக்க குப்பை தொட்டியினை பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கைக்காக வைத்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் நலன் கருதி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  4. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  5. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  6. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  9. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...