/* */

அரசு தடை செய்த பிளாஸ்டிக் பைகளை விற்காதீர்கள்: பசுமை தீர்ப்பாய தலைவர் வேண்டுகோள்

அரசு தடை செய்த பிளாஸ்டிக் பைகளை விற்க வேண்டாம் என்று பசுமை தீர்ப்பாய தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

அரசு தடை செய்த பிளாஸ்டிக் பைகளை விற்காதீர்கள்: பசுமை தீர்ப்பாய தலைவர் வேண்டுகோள்
X

காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்ற வியாபாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பசுமை தீர்ப்பாய தலைவர் டாக்டர் ஜோதிமணி பேசினார்.

காஞ்சிபுரம் நகரில் உள்ள வியாபார பெருமக்கள் நுகர் பொருட்கள் விநியோகஸ்தர் ஆலோசனை கூட்டம் அறிஞர் அண்ணா அரங்கில் மாநகராட்சி ஆணையர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பசுமை தீர்ப்பாய தலைவர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு‌ அலுவலர் நீதியரசர் டாக்டர் ஜோதிமணி கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பொருட்கள் ஆகும். இதில் அரசு விதிகளுக்கு அப்பாற்பட்டு கையாளப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகளால் பெரும் சிக்கல் உள்ளதால் வியாபார பெருமக்கள் அரசு விதித்த கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மேலும் விற்பனை செய்வதை வியாபாரிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் நாளைய சமுதாயம் நல்லதொரு உலகை பெறும் வகையில் நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என தெரிவித்தார்.

மேலும் நகர வியாபாரிகள் மற்றும் நுகர் பொருள் விநியோகஸ்தர் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளையும் அதற்கு உண்டான தீர்வுகளையும் எடுத்துரைத்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி அலுவர்களும் , சுகாதார ஆய்வாளர்களும் மற்றும் வியாபார பெருமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  3. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  4. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  5. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  6. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  10. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய