பெண்களை கூனி குறுக வைக்கும் தி.மு.க. அமைச்சர்- டி.ஜெயக்குமார் கண்டனம்

தி.மு.க. அமைச்சர்- பெண்களை கூனி குறுக வைக்கும் வகையில் பேசி உள்ளார் என்று டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெண்களை கூனி குறுக வைக்கும் தி.மு.க. அமைச்சர்- டி.ஜெயக்குமார் கண்டனம்
X

உத்தரமேரூரில் நடைபெற்ற தனியார் வணிக வளாக திறப்பு விழாவின் போது செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் டி.ஜெயக்குமார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூரில் அ.தி.மு.க. பிரமுகர் புதியதாக துவங்கியுள்ள வணிக வளாகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் , காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமாள வி.சோமசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் உடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் சந்திப்பில் ஜெயக்குமார் கூறியதாவது:-

தி.மு.க. அமைச்சர் பொன்முடி பெண் ஒருவர் பஸ்சில் பயணம் செய்த போது ஏற்பட்ட வாக்கு வாதம் தொடர்பாக அநாகரீகமான வார்த்தைகளை பேசி உள்ளார். ஓசி என அவர் பேசிய விவகாரம் பெண்கள் அரசு பேருந்துகளில் இனி வரும் காலங்களில் கூனிக்குறுகி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அரசின் போது பொது மக்களுக்கு வழங்கக்கூடிய பொருட்களின் பெயர்களை கூட விலையில்லா பொருட்கள் என குறிப்பிட்டு யார் மனதும் புண்படாமல் பெயரிட்டு வழங்கி நாங்கள் பேசி வந்தோம். அ.தி.மு.க.வினர் நாகரீக சொல்லை பயன்படுத்தி மேடையில் பேசி வந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக அமைச்சர்கள் அநாகரிகமான வார்த்தைகளை மேடையிலே பேசி அதன் மூலம் அனைத்து தரப்பினரையும் மன வருத்தம் அடைய செய்கின்றனர். இது அவர்களின் அநாகரிகமான முறைகளை வெளிப்படுத்துகிறது.

இந்துக்களைப் பற்றி அவ்வப்போது தவறாக பேசும் ராஜாவை இதுவரை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? இந்துக்கள் பற்றி பேசுவது முதலமைச்சர் குடும்பத்தாரை சேர்த்து பேசுவது போல் தான் உள்ளது.ஒரு பக்கம் எந்த மதத்திற்கும் எதிரி அல்ல என பேசிவிட்டு மறுபக்கம் இந்துக்களை பற்றி தவறாக பேசுபவர்களை கண்டிக்காமல் ஊக்குவிப்பது தான் இந்த அரசு, எந்த மதத்தையும் இழிவு படுத்தி பேசினால் அவர்களது பதவியை எடுத்து விடுவேன் என்றும் அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறாமல் ஏமாற்றி முதலமைச்சர் பேசி வருகிறார்.

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்றினால் பெயர் வந்துவிடும் என்ற காரணத்திற்காக திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு கமிஷனுக்காக திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளனர். இதன் விளைவு 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.

பசும்பொன் தேவர் தங்க கவசம் எங்களிடம் தான் வரும். நாங்கள் தான் அ.தி.மு.க. கட்சி ... எங்களிடம் தான் தங்க கவசத்தை ஒப்படைப்பார்கள், ஓ.பி.எஸ். தரப்புக்கு தார்மீக உரிமையும் கிடையாது கட்சியும் கிடையாது.தற்போதைய தமிழக அரசு கண்ணிருந்தும் குருடாக, காது இருந்தும் செவிடாக இருக்கிறது.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Updated On: 5 Oct 2022 11:30 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  கொலம்பியா நிலச்சரிவு: உயிரிழந்த 34 பேரில் எட்டு சிறுவர்கள்
 2. தென்காசி
  தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல...
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 4. திருவில்லிபுத்தூர்
  தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல...
 5. தொழில்நுட்பம்
  எலோன் மஸ்க் பயன்படுத்தவுள்ள நியூராலிங்க் தொழில்நுட்பம் என்றால்
 6. விளையாட்டு
  உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
 7. திருவண்ணாமலை
  கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்...
 8. திருவண்ணாமலை
  அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
 9. இந்தியா
  சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள்...
 10. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை...