/* */

காஞ்சிபுரத்தில் ரோபாடிக் இயந்திரம் மூலம் கழிவுகளை அகற்றி செயல் விளக்கம்

காஞ்சிபுரத்தில் மேயர் முன்னிலையில் ரோபாடிக் இயந்திரம் மூலம் கழிவுகளை அகற்றி தனியார் நிறுவனம் செயல் விளக்கம் அளித்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் ரோபாடிக் இயந்திரம் மூலம்  கழிவுகளை அகற்றி  செயல் விளக்கம்
X

ரோபாடிக் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை கழிவுகளை‌ அகற்றுவது குறித்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் குடியிருப்புகள் அதிகரித்தது வருகிறது.

குடியிருப்பின் கான பாதாளா சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும் காஞ்சிபுரம் பகுதியில் செயல்படும் அரிசி ஆலைகள் மற்றும் சிறு நிறுவனங்களால் அவ்வப்போது கழிவு நீர் தடை இன்றி செல்வது தடை ஏற்பட்டு வருகிறது.

மேலும் நகர விரிவாக்கம் என்பதால் மனித பயன்பாட்டை குறைத்து பணி செய்யும் நோக்கில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை கழிவு அகற்றும் இயந்திரத்தை காஞ்சிபுரம் மாநகராட்சி செயல்முறை விளக்கம் அளித்தது.

இந்நிகழ்வு மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் மற்றும் ஆணையர் கண்ணன் முன்னிலையில் அந்நிறுவன ஊழியர்கள் செயல்முறை விளக்கமளித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

இந்த இயந்திரம் 12 அடி ஆழம் வரை புதிதாக சென்று கழிவுகளை சுத்தம் செய்யும் திறன் கொண்டது எனவும், 180 டிகிரி கோணத்தில் செயல்படும் வகையில் உள்ளது. மேலும் இந்த இயந்திரத்தில் 4அதிநவீன கேமரா செயல்படுவதால் எளிதாக அடைப்பு பகுதி சரி செய்யபடும் .

தொடர்ந்து 30நிமிடங்கள் இந்த இயந்திரம் தங்கு தடையின்றி செயல்படுவதால் நாளொன்றுக்கு 8 புகார்கள் குறைந்து சரி செய்யலாம் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் கூறுகையில் , சுமார் 40 லட்சம் மதிப்பு என்பதால் இந்த இயந்திரம் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் செயல்முறையில் தொடர்ந்து 15நாட்கள் இந்நிறுவனம் மேற்கொள்ளும் எனவும் , மக்களின் வரவேற்பை பொறுத்து இதனை தொடர மாமன்றம் முடிவு செய்துள்ளது எனது தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், சசிகலாகணேஷ், அஸ்லாம்பேகம் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 July 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...