/* */

துணை மருத்துவமனைகளில் 145 ஆக்ஸிஜன் படுக்கைகள்- ஆட்சியர் மகேஸ்வரி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மருத்துவமனைகளில் 145 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க உள்ளதாக கலெக்டர் மகேஷ்வரி தெரிவித்தார்.

HIGHLIGHTS

துணை மருத்துவமனைகளில் 145 ஆக்ஸிஜன் படுக்கைகள்- ஆட்சியர் மகேஸ்வரி
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனை காஞ்சிபுரம் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி முனைவர் சுப்பிரமணியன் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் , மாங்காடு மற்றும் எழிச்சூர் கேர் சென்டர்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்

அதன்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கூட்டம் நடைபெற்றது.இதில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அலுவலர்களுக்கு அளித்து பரவலை கட்டுப்படுத்த அறிவுரை வழங்கினர்.

அதன்பின் பேசிய மாவட்ட ஆட்சியர் , காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதிய கட்டிடத்தில் 350 ஆக்சிஜன் படுக்கைகளும் , மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் , உத்திரமேரூர் , ஸ்ரீபெரும்புதூர் துணை மருத்துவமனைகளிலும் 145 ஆக்ஸிஜன் படுக்கைகள் விரைவில் வர உள்ளதாகவும் தெரிவித்தார்

மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால் சட்டப்படி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Updated On: 7 May 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  4. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  5. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  7. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்