/* */

காஞ்சிபுரம் அருகே கூட்டுறவு மருந்தகம் திறப்பு - 20 % தள்ளுபடி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் தொடக்க வேளாண்மை வங்கியின் கீழ் இரண்டு மருந்தகங்கள் திறக்கப்பட்டன.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே கூட்டுறவு மருந்தகம் திறப்பு -    20 % தள்ளுபடி
X

கருக்குப்பேட்டையில் கூட்டுறவுத்துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள புதிய மருந்தகம்.

தமிழகம் முழுவதும் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக, 72 கூட்டுறவு மருந்தகத்தை திறந்து வைத்தார். அவ்வகையில், காஞ்சிபுரம் அருகேயுள்ள கருக்குப்பேட்டையில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிய மருந்தக திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு உத்தரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி மருந்தகத்தை திறந்து வைத்தார். மேலும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி சார்பில், விவசாயிகள் 5 நபர்களுக்கு ரூபாய் 2 லட்சம் பயிர் கடன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் எஸ்.லெட்சுமி , மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதிகள் சுந்தரமூர்த்தி, விக்டர் செல்வகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ஜெயராமன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பியில் கூட்டுறவு மருந்தகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

Updated On: 16 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்