/* */

செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி : பூமி பூஜையுடன் துவக்கம்

காஞ்சிபுரம் அடுத்த மாகரல் செய்யாற்றின் குறுக்கே, புதிதாக கட்டப்பட உள்ள உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. .

HIGHLIGHTS

செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி : பூமி பூஜையுடன் துவக்கம்
X

செய்யாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.

உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில், வெங்கச்சேரி - மாகரல் இடையே, செய்யாறு குறுக்கிடும் இடத்தில், உத்திரமேரூர் ஒன்றியத்தையும், காஞ்சிபுரம் ஒன்றியத்தையும் இணைக்கும் பாலம் உள்ளது.

கடந்த, 2015ல் பெய்த கன மழையால், வெங்கச்சேரி பாலம் சேதமடைந்தது. இதனால், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து, 2016ல், புதிய பாலம் கட்ட அப்போதைய அ.தி.மு.க., அரசு, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும், பாலம் அமைக்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, வெங்கச்சேரியில் புதிய பாலம் அமைக்க தமிழக அரசு, 21.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. கடந்த ஆண்டு அக்., மாதம், ஆற்றின் நிலத்தடியில் ஆழ்துளை குழாய் மூலம், மண் மாதிரி சேகரிக்கப்பட்டு, மண் அடுக்குகளின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

புதிய பாலத்திற்கு அணுகுசாலை மற்றும் பாலம் கட்டுமானப் பணி நிறைவு பெறும் வகையில், போக்கு வரத்திற்காக தற்காலிக மாற்றுப்பாதை அமைப்பதற்கான ஆய்வு பணியும் நடந்து முடிந்தது.

கட்டுமானப் பணி துவங்க உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நவம்பரில் பாலம் உடைந்து சேதமானது.இந்நிலையில், புதிய பாலம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை இன்று காலை, 10:30 மணிக்கு நடைபெற்றது.

ஊரக நகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மாகரல் ஊராட்சி மன்ற தலைவர் மேத்தா ஞானவேல், ஆதவப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் , குமார், ஞானவேல், கலாநிதி என அதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jan 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  6. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  7. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  9. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  10. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...