/* */

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மீது புகார்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை கேட்கும் நாள் கூட்டத்தில் திட்ட இயக்குனர் மீது புகார் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மீது புகார்
X

ஊரக வளர்ச்சி திட்டத்தின் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக திட்ட இயக்குனர் மீது பபல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம்  புகார் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் மீது மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் புகார் மனு அளித்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

திட்ட இயக்குனர் செல்வகுமார்.

அவ்வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, திட்ட இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய துறைகளுக்கு பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி , மக்கள் மன்றம் உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் புகார் மனு ஒன்று அளித்தனர்.

அம்மனுவினை பார்வையிட்ட ஆட்சியர் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார். மாவட்ட திட்ட இயக்குனர் அருகில் அமர்ந்திருக்க அவர் மீது அளித்த புகார் குறித்து புகார் தெரிவித்தவரிடம் விளக்கம் கேட்டார்.

அம்மனுவில் , மணல்மேடு கூரம் ஊராட்சிகளில் பழங்குடி இன மக்களின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டுமானங்களை பாதியிலே நிறுத்திவிட்டு முழு பணத்தையும் பெற்று உள்ளனர். கருக்குப்பேட்டையில் இருளர் இன மக்களுக்கு கட்டித் தரப்பட்ட வீடுகளில் நீர் உறிஞ்சும் தொட்டி கட்டாமலேயே கட்டியதாக ரூபாய் 12500 எடுத்துள்ளனர்

இதே போல் 2016 - 17 கிராமத்தில் இருளர் மக்களுக்கு கட்டப்பட்ட வீடு தற்போது மோசமான நிலையை எட்டியுள்ளது இதற்கு தரமற்ற பணிகளே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேற்கண்ட புகார்கள் மீது மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மனுவில் குற்றம் சாட்டிய போது மாவட்ட ஆட்சியரின் அருகில் திட்ட இயக்குனர் செல்வகுமார் அமர்ந்திருந்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 May 2023 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?