/* */

காஞ்சிபுரத்தில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு: ஆட்சியர் துவக்கம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் “நான் முதல்வன்” திட்டத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு:   ஆட்சியர் துவக்கம்
X

போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் மாணவிக்கு பயிற்சி புத்தகங்களை வழங்கிய போது. உடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணகிரி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்தார்.

பின்னர் மாணவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கி பேசிய ஆட்சியர், தமிழ்நாடு அரசு “நான் முதல்வன்” என்ற சிறப்பு திட்டம் மூலம், பொறியியல் கல்லூரி மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உரிய வேலை வாய்ப்பினை பெறும் நோக்கில் தொழில் திறன் பயிற்சிகளை கல்லூரிகள் தோறும் நடத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் அடுத்த கட்டமாக மத்திய அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த பயிற்சிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் கட்டமாக 150 நபர்களுக்கு வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட என் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர், ஒரு அரசு கல்லூரி முதல்வர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் உள்ளிட்ட உறுப்பினர்களை கொண்ட குழு அமைத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சியினை பெற முதல் 150 தகுதியான நபர்கள் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தெரிவு செய்யப்பட்டு சிறந்த பயிற்றுவிப்பு வல்லுநர்களை கொண்டு இன்று முதல் துவக்கப்பட்டு 100 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சியானது இரயில்வே தேர்வுகள் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள், வங்கி பணித்தேர்வுகள் (RRB, SSC, IBPS) ஆகியவற்றை திறன்பட எதிர்கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சி பெறும் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்த மொத்தம் 446 நபர்களில் முதல்கட்டமாக 150 நபர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தால் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 45 இடங்களில் 6750 நபர்களுக்கு இப்பயிற்சி இன்று முதல் 100 நாட்களுக்கு வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இத்துவக்க விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் அருணகிரி, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் காயத்திரி, அரசு அலுவலர்கள் மற்றும் பயிற்சி வகுப்பு மாணவ, மாணவியர்கள் கலந்துக் கொண்டனர்.

Updated On: 29 May 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!