/* */

அச்சத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சக ஊழியர்கள்...

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

HIGHLIGHTS

அச்சத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சக  ஊழியர்கள்...
X
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இயங்கி வருகிறது ஜி.1846 காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகம். கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அரசு அச்சு பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் ஊரக உள்ளாட்சி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் , வேட்பாளர்கள் கையேடு உள்ளிட்ட அச்சு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் அன்று வாக்குச்சீட்டு நடைமுறை உள்ளதால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இக்கட்டிடம் மிகவும் சேதமடைந்து எந்தவித புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் , தற்போது கடந்த ஒருவார காலமாகவே காஞ்சிபுரத்தில் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.

அச்சமயம் மேற்கூரை ஒழுகல் காரணமாக தரையில் நீர் தேக்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மின்சார இணைப்புகளும் சரிவர இல்லாததால் ஊழியர்கள் ஒரு வித அச்சத்துடன் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மின் மோட்டார் மூலம் அச்சகபணி தொடர்ந்து நடைபெற வேண்டியுள்ளதால் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க ஊழியர்கள் அறிவுறுத்தபடவேண்டும்.

மழை நீரில் பேப்பர்கள் போட்டு ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் , கட்டிட ஸ்திரத்தன்மை எவ்விதத்தில் உள்ளதோ? வெளிப்புறங்களில் பார்க்கையில் பில்லர் கம்பி தெரிகிற நிலை உள்ளது.

நல்வாய்ப்புடன் பணிகள் நிறைவு பெற்றபின் இக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தை கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 26 Sep 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?