/* */

காஞ்சிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ராட்சத பலூன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செஸ் ஒலிம்பியாட் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ராட்சத பலூன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்  ராட்சத பலூன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ராட்சத பலூனை அமைச்சர் அன்பரசன் பறக்க விட்டார்.

தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இதனையொட்டி அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பாக ராட்சத பலூனை தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர் , சி.வி எம்.பி.எழிலரசன் , மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் இணைந்து பறக்க விட்டனர்.

சர்வதேச சேஸ் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், குறிப்பாக உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் நடைபெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாகும், இது நமக்கெல்லாம் பெருமை எனவும் இதனை சிறப்பான முறையில் நடத்திட பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், பொறியாளர் கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி. எம். குமார் , மண்டல குழு தலைவர்கள் , மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தார்.

Updated On: 18 July 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.5.61 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்
  8. ஈரோடு
    நாளை பொது விடுமுறை: ஈரோடு தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா அறிவிப்பு
  9. நாமக்கல்
    நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தயார் நிலையில் 1,628 வாக்குச்சாவடிகள்
  10. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!