/* */

செஸ் ஒலிம்பியாட்: காஞ்சிபுரத்தில் 188 மரக் கன்றுகளை நட்டு விழிப்புணர்வு

44வது செஸ் ஒலிம்பியாட்டையொட்டி காஞ்சிபுரத்தில் 188 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

செஸ் ஒலிம்பியாட்: காஞ்சிபுரத்தில் 188 மரக் கன்றுகளை நட்டு விழிப்புணர்வு
X

செஸ் ஒலிம்பியாட்டையொட்டி காஞ்சிபுரத்தில் அமைச்சர் அன்பரசன் தலைமையில் 188மரக்கன்றுகள் நடப்பட்டது.

மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 44 வது செஸ் விளையாட்டு போட்டியில் 188 நாடுகள் பங்கு பெறுவதையொட்டி காஞ்சிபுரம் கீழம்பி பகுதியில் 188 நாவல் மரக்கன்றுகளை நடும் விழா ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் , காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க சுந்தர் , மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் ஆகியோர் பங்கு பெற்று நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் நித்யாசுகுமார், ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபிரியா இளமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, சீனுவாசன் , ஒன்றிய குழு உறுப்பினர் விமல், டிஎம்பி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 July 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?