கிளெனீக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் கேத் லேப்: சுகாதார அமைச்சர் திறப்பு

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம் எல் ஏ ரமேஷ் அரவிந்த் கலந்து கொண்டனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கிளெனீக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில்  கேத் லேப்: சுகாதார அமைச்சர் திறப்பு
X

பிலிப்ஸ் அஸுரியன் 7 சி12 கேத் லேபை தமிழ்நாடு அரசின்  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ., எஸ்.அரவிந்திரமேஷ் மற்றும் கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். அலோக் குல்லர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

சென்னையில் உள்ள முன்னணி குவாட்டர்னரி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹெல்த்கேர் மையமான கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மேம்பட்ட பிலிப்ஸ் அஸுரியன் 7 சி12 கேத் லேப் வசதியை அறிமுகப்படுத்தியது.

பிலிப்ஸ் அஸுரியன் 7 சி12 கேத்லேப்- ஐ தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ., எஸ்.அரவிந்திரமேஷ் மற்றும் கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.அலோக் குல்லர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

பிலிப்ஸ் அசூரியன் 7 சி12 கேத் லேப் இன் அறிமுகத்துடன், கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, அதிநவீன சிகிச்சையை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. இப்போது சுகாதாரத்தில் புதிய தரநிலைகளை அமைக்கும். உயர்தர தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம், நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட இதய செயல்முறைகளை உறுதிப்படுத்த முடியும். இந்த வசதி குறைந்தபட்ச மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரம், விரைவான நடைமுறைகள், சிக்கல்களின் அபாயத்தைக் குறைத்தல், உகந்த செலவு மற்றும் ஒட்டுமொத்த சிறந்த விளைவுகளை உறுதி செய்கிறது.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்தி பேசியதாவது: பிலிப்ஸ் அசூரியன் 7 சி12 கேத் லேப்பைத் திறந்து வைத்ததற்காக GGHC -இல் உள்ள ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கும் குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், இந்த புதிய கேத் லேப் வசதி, நோயாளிகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான இருதய மற்றும் நரம்புக்குழாய் சிகிச்சைகளை வழங்க உதவும். கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் முன்னேற்றம் கடந்த சில வருடங்களாக குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதய ஆரோக்கியத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கூடுதல் பங்களிக்கும் என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.

பேராசிரியரும், துறை தலைவர் - மூத்த ஆலோசகர், கிளெனீக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி இதய அறிவியல் நிபுணர் டாக்டர் கோபு பேசுகையில், இது நமது நோயாளிகளுக்கு உயர் துல்லியமான ஆஞ்சியோபிளாஸ்ட் மற்றும் பாதுகாப்பான ஆஞ்சியோ பிளாஸ்ட் வழங்க வழி வகுக்கும். இந்த புதிய கேத் லேப் அதிக ஆபத்து மற்றும் சிக்கலான ஆஞ்சியோ பிளாஸ்டிகளை அதிக பாதுகாப்பு மற்றும் செயல்திறனுடன் செய்ய உதவும் என குறிப்பிட்டார்.

விழாவில் டாக்டர் அலோக் குல்லார் பேசுகையில், இதய நோய்களின் அதிகரித்து வரும் போக்கைக் கருத்தில் கொண்டு, சமூகத்திற்கு சேவை செய்ய நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். மேம்பட்ட கேத் ஆய்வகம் பல்வேறு துறை சிகிச்சைகளுக்கான வாய்ப்பை வழங்கும். அதாவது, இருதயவியல், நரம்பியல், வாஸ்குலர் அறுவை சிகிச்சை, இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி ஆகிய பரிசோதனைகளுக்கு கிளெனீக்கெல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, பிலிப்ஸ் அசூரியன் 7 சி12 கேத் லேப் - பெரிதும் உதவும். அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மேம்பட்ட இருதய, இரத்தக் குழாய் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை தலையீடுகளை நாடு முழுவதும் அதிக துல்லியம் மற்றும் பாதுகாப்பு மற்றும் சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான முன்னோடியாக இருக்கும் என்றார் அவர்.

Updated On: 12 Oct 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி