/* */

கடனை திருப்பி கேட்ட முதியவரை அவதூறாக பேசிய பள்ளி ஆசிரியர் மீது வழக்கு

காஞ்சிபுரத்தில் கொடுத்த கடனை திருப்பிகேட்ட முதியவரை அவதூறாக பேசிய பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

HIGHLIGHTS

கடனை திருப்பி கேட்ட முதியவரை அவதூறாக பேசிய பள்ளி ஆசிரியர் மீது  வழக்கு
X

முதியவரை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டள்ள ஆசிரியர் சேகர் மற்றும் அவரது சகோதரர்

காஞ்சிபுரம் எஸ் பி என் வெள்ளை தெருவை சேர்ந்தவர் மணி (67).இவர் அரிசி மற்றும் நெல் மொத்த வியாபாரம் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராயக்கோட்டை தெருவை சேர்ந்த கன்னியப்பன் மகன் சக்திவேல் என்பவர் அறிமுகமாகியுள்ளார். சக்திவேல் டிராவல்ஸ் உரிமையாளர் ஆக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மணிக்கு சக்திவேல் தனது சகோதரரான ஆசிரியர் சேகர் என்பவரை அறிமுகப்படுத்தி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஒரு முறை சகோதரர்கள் இருவரும் மணியிடம் டிராவல்ஸ் மற்றும் தொழில் செய்ய 5 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் அதற்கான வட்டியை முறையாக தருவதாகவும் கூறி பெற்றுள்ளனர்.

அதன் டிசம்பர் மாதம் கடனை திருப்பி அளிப்பதாகக் கூறி வங்கி காசோலையை சகோதரர்கள் அளித்துள்ளார். இதனை மணி வங்கியில் செலுத்தியபோது காசோலை கையெழுத்து சரியில்லை என திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதனை பெற்றுக் கொண்டு மீண்டும் வழங்கிய காலம் காசோலையும் இதே போல் வங்கியிலிருந்து திருப்பப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம்தேதி பெரிய காஞ்சிபுரம் பகுதியில் இருவரும் நின்றிருந்தபோது மணி கடன் திருப்பி அளிக்க கேட்டபோது இருவரும் பொது இடமென்றும் பாராமல் அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் அவரை தாக்கியததாக கூறி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொரோனா பரவல் காரணமாக மேற்படி புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்ததை தொடர்ந்து பலமுறை மணி காவல் நிலையம் சென்றுள்ளார். இதில் எதிர் தரப்புக்கு சாதகமாகவே செயல்பாடு இருந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார் அதன்பேரில் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் குற்ற எண் 1737/2021 பதிவு செய்யப்பட்டு 294(b),323,506(1) என மூன்று பிரிவுகளின் கீழ் சக்திவேலு மற்றும் சேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 26 Sep 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி