/* */

காஞ்சிபுரத்தில் பல மாதங்களாக பூட்டி இருக்கும் கட்டிடங்கள் நாளை திறப்பு

காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் முகாம் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் குடியிருப்புகள் நாளை திறக்கப்படுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் பல மாதங்களாக பூட்டி இருக்கும் கட்டிடங்கள் நாளை திறப்பு
X
காஞ்சிபுரத்தில் நாளை திறக்கப்பட உள்ள கட்டிடம்.

காஞ்சிபுரத்தில் கட்டுமான பணி முடிந்து பல மாதங்களாக பூட்டிக்கிடந்த குடியிருப்புகள் நாளை திறக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. மேலும், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் அமைந்துள்ளது.

இதன் நிர்வாகப் பணிகளை கவனிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளை கவனிக்கும் வகையில் இரண்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளடக்கி உள்ளது.

காஞ்சிபுரம், வாலாஜாபாத் ,உத்திரமேரூர் ஆகிய பகுதிகள் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்தின் கீழும், ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய பகுதிகள் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் கீழ் வருவாய்த்துறை அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட உயர் அலுவலர்கள் தங்குவதற்காக அரசு சார்பில் குடியிருப்புகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு துறையின் பணியாக புதிய கட்டடங்கள் கட்டுவது மற்றும் ஏற்கனவே உள்ள குடியிருப்புகளை பராமரிப்பு செய்து வருகின்றனர்

இந்நிலையில், காஞ்சிபுரம் கோட்டாட்சியருக்கு குடியிருப்பு வளாகம் அமைக்க இப்பகுதி தேர்வு செய்யப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் பணிகள் துவங்கி ஓர் ஆண்டில் நிறைவு பெற்றது. பணிகள் நிறைவு பெற்று ஆறு மாத காலமாகவே பொதுப்பணித்துறை வருவாய்த் துறையிடம் ஒப்படைத்தும் அந்த குடியிருப்பு வளாகம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே வைக்கப்பட்டிருந்தது.

வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பை திறக்க பல முறை முயற்சித்தும் பல்வேறு காரணங்களால் திறக்கப்படவில்லை. தற்போதும் பழைய குடியிருப்பு பகுதியிலேயே வருவாய் கோட்டாட்சியர் தங்கி பணிபுரிந்து வருகிறார்.

தமிழகத்தில் பல துறைகள் சார்பில் தமிழக முதல்வர் நாள்தோறும் காணொலி காட்சி வழியாக புதிய கட்டிடங்களை திறந்து வைத்து வருகிறார்.

அப்படி இருக்கையில், தற்போது வரை வருவாய் துறை சார்பில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடம் திறப்பு விழாவு காணமால் காட்சியளிக்கிறது. பல லட்சம் மதிப்பீட்டில் அந்தப் பகுதியில் உள்ள காடு போன்ற பகுதியை அழித்து புதியதாக கட்டப்பட்ட இந்த குடியிருப்பு வளாகம் பூட்டி இருப்பதும், அதை சுத்தம் செய்யவோ இல்லாமல் குப்பைகளாகவும் காட்சியளிப்பது வருத்தம் அளிப்பதாக கடந்த நவம்பர் மாதம் இன்ஸ்டா நியூஸ் இணைய செய்தி தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நாளை காலை சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வருவாய் கோட்டாட்சியர் முகாம் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு உள்ளிட்டவைகளை திறந்து வைக்க உள்ளனர்.

பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் வருவாய் அலுவலர்களின் கட்டி கட்டி முடிக்கப்பட்டு தற்போது திறக்கப்படுவதால் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 30 May 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!