சட்டநாள்: வழக்கறிஞர் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்

சட்ட நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சட்டநாள்: வழக்கறிஞர் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்
X

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர், இரத்ததான முகாமை தொடங்கி வைத்தனர். 

வருடந்தோறும் நவம்பர் 26ம் தேதி, அரசியல் அமைப்பு உருவான தினத்தினை சட்ட நாளாக கொண்டாடுவது வழக்கம். அவ்வகையில் காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு, குருதி நன்கொடையாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று பூக்கடை சத்திரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், இரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை, வழக்கறிஞர்களான காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குருதி நன்கொடை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 7:30 AM GMT

Related News