பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: காஞ்சிபுரத்தில் திமுகவினர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உள்ள திருஉருவச்சிலைக்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: காஞ்சிபுரத்தில் திமுகவினர் மரியாதை
X

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும்  திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்.

பேரறிஞர் அண்ணாவின் 113வதுபிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காஞ்சியில் உள்ள அவரது நினைவு இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 6மணியளவில், திமுக சார்பில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும் , உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி .செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் ஆகியோர், அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் காஞ்சி நகர திமுக நகர செயலாளர் சண்பிராண்ட் ஆறுமுகம், திமுக நிர்வாகிகள் சந்துரு,தசரதன், ஒன்றிய செயலாளர்கள் பி எம் குமார், கே.குமணன், எஸ்.பி .பூபாலன், படப்பை மனோகரன், கோபால் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 1:00 AM GMT

Related News