காஞ்சிபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரத்தில் 13வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, கோலப்போட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காஞ்சிபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி  விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

காஞ்சிபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தினையொட்டி விழிப்புணர்வு  பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தினையொட்டி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் பல்வேறு வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் இந்த பேரணியில் கலந்து கொண்டார். பேரணி காமராஜர் தெரு , வள்ளல் பச்சையப்பன் தெரு , மேட்டு தெரு காவலன் கேட் பகுதிகள் வழியாக பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.வழி நெடுகிலும் ஆட்சியர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

துண்டு பிரசுரம் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய வாக்கு சாவடிநிலை அலுவலர்களான எல்லப்பன், ரவிகுமார், பாலசரஸ்வதி, சந்திரா, ரேவதி ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

மாவட்ட அளவில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மகளிர் சுய உதவி குழுவினர் வரைந்த கோலங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

தேர்தல் விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மகளிர் சுய உதவி குழுவினர் வாக்காளர் தினத்தையொட்டி வாக்களிப்பது நமது கடமை, பணம் பெறாமல் வாக்களிப்பேன், எனது வாக்கு மூலம் சிறந்த உறுப்பினரை தேர்ந்தெடுப்பேன் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்களில் பல வண்ண கோலம் இட்டு அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முன்னதாக மகளிர் சுய உதவி குழுக்களால் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

பல்வேறு பள்ளி கல்லூரி மாணவிகள் வாக்களிப்பதின் அவசியம், பணம் பெறாமல் வாக்களித்தல், சிறந்த உறுப்பினர் மூலம் நாடு வளம் பெறுதல் உள்ளிட்ட கருத்துக்களை முன்னிறுத்தி குறு நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோல் உத்திரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் 13வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கல்லூரிகளில் இன்று தேசிய வாக்காளர் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முதல் முறையாக வாக்களிக்க உள்ள மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, காஞ்சிபுரம் வட்டாட்சியர் பிரகாஷ், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் இராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2023 12:05 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...