/* */

நாட்டு மாடுகளை பாதுகாக்க கரும்பிலான காங்கேயம் காளையை உருவாக்கி விழிப்புணர்வு

காஞ்சிபுரத்தில் நாட்டு மாடுகளை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விவசாயி ஒருவர் ஆயிரம் கரும்புகளை கொண்டு காளையின் தோற்றத்தை உருவாக்கியுள்ளார்.

HIGHLIGHTS

நாட்டு மாடுகளை பாதுகாக்க கரும்பிலான காங்கேயம் காளையை உருவாக்கி விழிப்புணர்வு
X

கரும்புகளால் உருவாக்கப்பட்ட காங்கேயம் காளை.

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிர்பூர் மதுரா குண்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆ.செந்தில்குமார். இவர் பாமக கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தனது விவசாய நிலத்தில் தைப்பொங்கல் திருநாளை சிறப்பு செய்யும் நாளாக அமையவும், விவசாயிகளின் உற்ற நண்பனாகவும், பசுமாடுகள் பசிக்கு பால் தரும் தாயாக விளங்கும் நாட்டு மாடுகளின் சிறப்பிக்கும் வகையிலும் பொங்கலை கொண்டாட தீர்மானித்தார்.

மேலும் தமிழர்களின் வீரத்தின் அடையாளமான ஒன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியாகும். பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் நாட்டு மாடு வகைகள் பெருமளவில் அழிந்து வருகிறது என்பது வருத்தமானது ஒன்றாகும்.

இந்தியாவில் சுமார் 87 வகையான நாட்டு மாடுகள் இருந்தன. தற்போது 35 வரையறுக்கப்பட்ட மாடுகள் மட்டுமே உள்ளது.

ஜல்லிக்கட்டு உம்பளச்சேரி, காங்கேயம், புலிக்குளம்ஆலம்பாடி, பர்கூர் ஆகிய காளைகள் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது.

இவை நான்கும் பழம் பெருமை வாய்ந்தவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நம் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப பரிமாண வளர்ச்சி அடைந்தவை ஆகும்.

நாட்டு மாடுகளின் சிறப்பை இளைய தலைமுறைகள் அறிந்து கொள்ளவும், விவசாயிகளிடையே நாட்டு மாடுகள் இனத்தை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நமது தமிழரின் வீர விளையாட்டில் பங்கு கொள்ளும் காங்கேயம் காளைகளை சிறப்பிக்கும் வகையில் இரண்டு காங்கேயம் காளைகளை சுமார் 1000 கரும்புகளை கொண்டு காளையின் இயற்கையான தோற்ற அளவுகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கரும்பிலான காளைகளை ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஏழு நாட்களாக வடிவமைத்தனர்.

Updated On: 14 Jan 2022 2:30 AM GMT

Related News