/* */

காஞ்சிபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

காஞ்சிபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர்  மறியல் போராட்டம்
X
காஞ்சிபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியல் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஏ. ஐ. டி. யு. சி. சார்பில் மறியல் போராட்டம் மாநில குழு உறுப்பினரும் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ. எஸ். கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி ரோடு தேரடி அருகில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ ஏ.. எஸ் கண்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய தொழிலாளர்கள்ள் போராடி பெற்ற வேலை பாதுகாப்பு சம்பள பாதுகாப்பு சமூக பாதுகாப்பு தொழிற்சங்க உரிமைகள் ஆகியவற்றிற்கான 44 சட்டங்களை நான்கு சட்ட தொகுப்பாக மோடி அரசு மாற்றி உள்ளதை வாபஸ் பெறுதல்.

240 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் 21,000 குறையாமல் மாத ஊதியம் வழங்க வேண்டும்.

தொழிலாளர் நல வாரியங்களில் சேர்ந்துள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் மாத ஓய்வூதியம் 6000 வழங்கிடவும், தொழிலாளர் நல வாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி பலன்களை தாமதம் இன்றி வழங்கவேண்டும்,

முதியோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகை சீராய்வு செய்வதென்று தட்டிக் கழிக்க எடுத்துள்ள முயற்சியை அரசு கைவிட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த மறியல் போராட்டம் காஞ்சிபுரம் தேரடி அருகில் நடைபெற்றது .

மறியல் போராட்டத்தின் போது 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்ட போது விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் அவர்களை வழிமறித்து கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

மறியல் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இப்போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் கார்த்தி, மாவட்ட பொது செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Jan 2023 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  2. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  3. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  5. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  7. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  8. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  9. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  10. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?