வெடி விபத்தை தவிர்க்க ஆலோசனை: மனித உரிமை ஆணைய உறுப்பினர்

காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து நடைபெற்ற இடத்தினை மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வெடி விபத்தை தவிர்க்க ஆலோசனை: மனித உரிமை ஆணைய உறுப்பினர்
X

காஞ்சிபுரம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் நேர்ந்த வெடி விபத்து பகுதியினை ஆய்வு செய்த மனித உரிமைகள் ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் பாஸ்கரன் மற்றும் உறுப்பினர்கள்.

வெடி விபத்தில் 9 பேர் பலியான இடத்தை மனித உரிமை ஆணையம் குழு சம்பவ இடத்தில் ஆய்விற்கு பின் இனி வரும் காலங்களில் வெடி விபத்து நடைபெறாத அளவிற்கு ஆலோசனை வழங்கி அறிக்கையாக அரசிடம் வழங்க உள்ளதாக மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டியளித்தார்.

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியில் இயங்கும் வெடி பொருள் தயாரிக்கும் குடோனில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற எதிர்பாராத தீ விபத்தில் 9 பேர் பலியான நிலையில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கர், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உறுப்பினர்கள் கண்ணதாசன் மற்றும் ராஜா இளங்கோ ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்தபின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அரங்கத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில மனித உரிமை ஆணையம் உறுப்பினர் கண்ணதாசன், இனி வரும் காலங்களில் இது போன்று விபத்து நடைபெறாமல் இருப்பதற்காக சில வழிமுறைகளை அரசிடம் அறிக்கைகள் கொடுக்க உள்ளோம், விபத்து குறித்து பல்வேறு கருத்துக்கள் பெறப்பட்டன விரைவில் அறிக்கையை அரசிடம் தரப்படும்.

தொழில்கள் பாதிக்கப்படாத அளவிற்கும், விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென மாநில மனித உரிமை ஆணையம் தெளிவாக உள்ளது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள், மனித உயிர்கள் பலியாவது ஏற்றுக்கொள்ள முடியாதது, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அரசிடம் ஆலோசனை வழங்க உள்ளோம் என தெரிவித்தார்.

Updated On: 25 March 2023 10:45 AM GMT

Related News

Latest News

 1. ஈரோடு மாநகரம்
  அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
 3. மணப்பாறை
  திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
 4. காஞ்சிபுரம்
  மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
 5. பெருந்துறை
  மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
 6. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
 7. ஈரோடு மாநகரம்
  ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
 8. கோவில்பட்டி
  காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
 9. கோவில்பட்டி
  தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
 10. வாசுதேவநல்லூர்
  தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா