/* */

காஞ்சிபுரத்தில், மின் தகன மயானம் அமைக்க ரூ.5 லட்சம் பங்களிப்பு தொகை அளித்த பட்டுச்சேலை நிறுவனம்..!

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் நாகலூத்துமேடு பகுதியில், அமைக்கப்படும் மின் தகன மயானத்திற்கு பட்டுச்சேலை நிறுவனத்தின் சார்பில் ரூ.5 லட்சம் பங்களிப்பு தொகை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில், மின் தகன மயானம் அமைக்க ரூ.5 லட்சம் பங்களிப்பு தொகை அளித்த பட்டுச்சேலை நிறுவனம்..!
X

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் ஆணையர் கண்ணன் ஆகியோரிடம் மின் தகன் மயானம் அமைக்க ரூ.5 லட்சம் பங்களிப்பு தொகை அளித்த பட்டுச்சேலை நிறுவன உரிமையாளர் சோமசுந்தரம்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் சின்ன காஞ்சிபுரம் நாகலூத்துமேடு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மின் தகன மயானம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு பொதுமக்கள் பங்களிப்பும் மாநகராட்சியிடம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மின் தகன மயானம் அமைக்க பலரும் பங்களிப்பு தொகையை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பிரபல பட்டுச்சேலை நிறுவனமான செங்கல்வராயன் சில்க்ஸ் நிறுவனம் சார்பில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் ஆணையர் கண்ணன் ஆகியோரிடம் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான காசோலையை மின் தகன மயானத்திற்கு தனது பங்களிப்பாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொறியாளர் கணேசன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், பட்டு சேலை உரிமையாளர் லோகேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையடுத்து, பொதுநல நோக்கில் காஞ்சிபுரம மாநகராட்சிக்கு மின் மயானம் அமைக்க பங்களிப்பு தொகையை வழங்கிய செங்கல்வராயன் சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.


Updated On: 4 July 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...