/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2320 பதவிகளுக்கு 8610 பேர் மனுதாக்கல்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2320 பதவிகளுக்கு 8610 நபர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2320 பதவிகளுக்கு 8610 பேர் மனுதாக்கல்.
X

தமிழகத்தில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

கடந்த 15ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக அறிவித்தது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் கண்காணிப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 6ஆம் தேதி காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்கள் அக்டோபர் 9ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் கடந்த ஒரு வாரமாக பெறப்பட்டு வந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 11 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு 98 நபர்களும், கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 274 நபர்களும் , கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் களுக்கு 1938 நபர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஒரு பதவி உயர்நீதி மன்ற தடை பெறபட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2321 பதவிகளுக்கு 8610 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்..

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 11பதவிகளுக்கு 86 வேட்பாளர்களும், 98 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு 535 வேட்பாளர்களும், 273 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1395 வேட்பாளர்களும் , 1938 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 6594 வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை காலை 10 மணி முதல் வேட்பு மனுக்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்ய உள்ளது. அதன்பின் மறுநாள் வாபஸ் பெறும் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது