/* */

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை தொடர்பாக 59 வழக்கு பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை தொடர்பாக 59 வழக்கு பதிவு
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ( பைல் படம்)

தமிழகத்தில் கடந்த வாரம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மது அருந்திய 23 பேர் உயிரிழந்த நிலையில், இது போன்று அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பது மற்றும் பல்வேறு ரசாயன பொருட்களை கொண்டு மதுபானங்கள் தயாரிப்பு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து அதற்கான நடவடிக்கையில் மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவித்தார்.

இந்த விவகாரம் தமிழக முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் தலைவர்கள் கண்டன செய்திகளையும் பதிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக மதுவிலக்கு மற்றும் காவல் துறையினர் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளில் சாராயம் தயாரித்து வைத்திருந்ததை அழித்தும் அவர்கள் கைது செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மேலும் தற்போது தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அரசு மதுபானங்களை கிராமத்தில் வசிக்கும் சிலர் வாங்கிச் சென்று விற்பனை செய்வதும் அவ்வப்போது அதனை காவல்துறையினர் தடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருவதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வடக்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் பகலவன் உத்தரவின் பேரில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களிலும் ஆய்வாளர் , துணை மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அரசு மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து மதுபானங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , இதுதொடர்பாக 33 ஆண்கள் 30 பெண்கள் என 63 நபர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 831 மதுபான பாட்டில்கள் (180ml) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுவெளியில் பொது மக்களுக்கு அருவருத்தக்க வகையில் மதுபானங்களை அருந்துவோர் மீதும் காவல்துறை சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 May 2023 2:18 PM GMT

Related News