/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 279 பேர் விருப்ப மனு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இன்று 279 பேர் விருப்ப மனு அளித்துள்ளதாக மாவட்ட செயலாளர் க.சுந்தர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 279 பேர் விருப்ப மனு
X

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு அளித்த வனதாட்சி ஆறுமுகம் மற்றும் நகர இளைஞர் துணி அமைப்பாளர் ஆரியமணிகண்டன்.

தமிழகத்தில் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் உத்திரமேரூர் குன்றத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களிலும் , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் , 274 ஊராட்சிகளில் தலைவர்கள் , ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் என பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக சார்பில் மாநகராட்சி பேரூராட்சி ஆகியவைகளில் போட்டியிடும் விரும்பும் நபர்கள் இன்று முதல் விருப்ப மனு கொடுக்கலாம் என மாவட்ட செயலாளர்கள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் அறிவித்திருந்தார்.

அதன் வகையில் இன்று காலை முதல் காஞ்சிபுரம் மாவட்ட திமுக அலுவலகமான அண்ணா பவளவிழா மாளிகையில் திமுகவினர் ஏராளமானோர் குவிந்தனர். மாநகராட்சியில் போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனு பெற்று ரூபாய் 10 ஆயிரத்துடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பொறுப்பாளர்களிடம் மனு அளித்தனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 121பேரும், உத்திரமேரூர் பேரூராட்சியில் போட்டியிட 37பேரும், வாலாஜாபாத் பேரூராட்சியில் போட்டியிட 25பேரும்‌, மதுராந்தகம் நகராட்சியில் 54பேர் என மொத்தம் 279பேர் தங்கள் விருப்ப மனுவை அளித்துள்ளதாக மாவட்ட செயலாளர் க.சுந்தர் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  3. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  5. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  6. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  7. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  8. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  10. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!