15 கிராம வார்டு உறுப்பினர் பதவியை வென்ற விஜய் மக்கள் இயக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
15 கிராம வார்டு உறுப்பினர் பதவியை வென்ற விஜய் மக்கள் இயக்கம்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இரு கட்டங்களாக நடைபெற்றது. பதிவான வாக்குகள் அனைத்தும் கடந்த 12ஆம் தேதி அந்தந்த ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்றது.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி , ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, கிராம ஊராட்சித் தலைவர் பதவி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ஆங்காங்கே போட்டியிட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 22 விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் போட்டியிட்டனர். இதில் 15 உறுப்பினர்கள் வெற்றி பெற்று கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 14 Oct 2021 12:45 PM GMT

Related News