/* */

மகனின் படிப்புச்செலவுக்கு வைத்த பணம் போச்சே..!கணவர் சூதாட்டத்தால் பறிபோன மனைவி உயிர்..!!

சென்னை நந்தம்பாக்கத்தில் சூதாட்டத்தில் மகனின் பள்ளி கட்டணத்திற்கு வைத்த பணத்தை கணவர் இழந்ததால் மனம் நொந்த மனைவி தற்கொலை செய்தார்.

HIGHLIGHTS

மகனின் படிப்புச்செலவுக்கு வைத்த பணம் போச்சே..!கணவர் சூதாட்டத்தால் பறிபோன மனைவி உயிர்..!!
X

சென்னை, நந்தம்பாக்கத்தில், கணவர் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட புவனேஷ்வரி

குடும்பத்தை பராமரிக்க வேண்டிய ஆண் மகனிடம், சூதாட்டம், மது, போதைபழக்கம் இரண்டும் சேர்ந்ததால் பல குடும்பங்கள் நிம்மதியை இழந்து அழிந்துள்ளன. இதற்கு மற்றொரு சாட்சியாக சென்னை நந்தம்பாக்கத்தில் குடும்பத் தலைவி புவனேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நமது இதயத்தை உலுக்குகிறது.

சென்னை நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி 2-வது தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (39), இவரது கணவர் சுரேஷ்பாபு (42), கடந்த 4 வருடங்களுக்கு மேலாக வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் சூதாட்டத்திற்கு அடிமையான சுரேஷ் சிந்தாதிரிபேட்டைக்கு அடிக்கடி சென்று பணம் வைத்து சூதாட்டம், விளையாடி தொடர்ந்து பணத்தை இழந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி அவ்வப்போது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 9-வது வகுப்பு படித்து வரும் தமது மகனின் பள்ளி கட்டணம் கட்டுவதற்காக வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மனைவி புவனேஷ்வரிக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு சுரேஷ்பாபு கிளம்பியுள்ளார்.

இந்த பணத்தை வைத்து, சிந்தாதிரிபேட்டையில் உள்ள சூதாட்ட கிளப்பில் சுரேஷ்பாபு சூதாட்டம் விளையாடியதாக கூறப்படுகிறது. இந்த சூதாட்டத்தில் மொத்த பணத்தையும் கணவர் இழந்ததை தெரிந்து மனம் உடைந்த போன மனைவி புவனேஸ்வரி படுக்கையறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நந்தம்பாக்கம் காவல்துறையினர், புவனேஷ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, புவனேஷ்வரி தற்கொலை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சமூகத்தில் மகனின் எதிர்காலம், கல்விக்கனவுகளுடன் உயிர் மரித்த புவனேஷ்வரியின் மரணம் இறுதியாக இருக்கட்டும். இதற்கு பிறகாவது, குடும்பங்களை சீரழிக்கும் சூதாட்டம், போதை பழக்கத்தில் இருந்து சமூகம் மீள வேண்டும். இதற்கு அரசும், காவல்துறையும் இணைந்து சட்டத்தையும், திட்டத்தையும் வகுத்து செயல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கண்ணீர் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 10 Jun 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்