வீட்டில் திருடிய வழக்கில் ஒருவர் கைது; தலைமறைவானவருக்கு வலைவீச்சு

ஆதம்பாக்கத்தில், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வீட்டில் திருடிய வழக்கில் ஒருவர் கைது; தலைமறைவானவருக்கு வலைவீச்சு
X

கோப்பு படம் 

சென்னை, ஆதம்பாக்கம், மகாலட்சுமிநகர், 11வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(27). பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரம் சென்று விட்டு, சென்னை திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்ற பார்த்தபோது, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, 2 கிராம் தங்க கம்மல் ஜோடி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தன.

இது குறித்த அவர் அளித்த புகாரின்பேரில், ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்த மாதவன், 23, வினோத், 19 ஆகியோர் திருடியது தெரியவந்தது. மாதவனை பிடித்த போலீசார், அவரிடம் இருந்து திருடப்பட்ட நகையை மீட்டனர். அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 2022-01-20T14:02:09+05:30

Related News