/* */

போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை பாராட்டி பரிசளித்த ஆட்சியரின் மகள்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சிரியர், பாஸ்கரபாண்டியனின் மகள் போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டி டைரி பரிசாக அளித்தார்

HIGHLIGHTS

போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை  பாராட்டி பரிசளித்த ஆட்சியரின் மகள்
X

போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை பார்த்து பாராட்டி பரிசளித்த ஆட்சியரின் மகள்.

போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை பார்த்து பாராட்டி பரிசளித்த ஆட்சியரின் மகள்.

சென்னை நந்தம்பாக்கம் அடுத்த மணப்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் தலைமை காவலர், சாலமன் சதீஷ்(44), இப்பகுதியில் அதிகளவில் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் "பீக் ஹவர்ஸ்" எனப்படும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும், இதனால் அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்திற்குள்ளாவது வழக்கம்.

ஆனால் போக்குவரத்து தலைமை காவலர் சாலமன் சதீஷ் அவர்கள் இதனை பணிச்சுமையாக கருதாமல் மிகவும் சுறுசுறுப்பாக தனது பணியை உற்சாகத்துடனும், வாகன ஓட்டிகளிடம் நடந்து கொள்ளும் விதத்தையும், அவ்வழியே தினந்தோறும் பள்ளிக்கு சென்று வரும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சிரியர், பாஸ்கரபாண்டியனின் மகள் மோனா மிர்தண்யா(6), அந்த போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டி அவருக்கு டைரி ஒன்றினை பரிசாக அளித்தார்.

1ம் வகுப்பு படிக்கும் சிறுமி, கூறுகையில் நான் பள்ளிக்கு போகும் போதும், வரும் போதும் போக்குவரத்து போலீஸ் அங்கிளை பார்ப்பேன், இன்று அவங்களுக்கு கிப்ட் கொடுத்தேன், அவங்க எல்லா டிராஃபிக் போலீஸ் அங்கிள் மாதிரி உட்கார்ந்து இருக்க மாட்டாங்க, ஹானஸ்டா அவங்க டியூட்டிய பார்ப்பாங்க என கூறியுள்ளார்.

இது குறித்து போக்குவரத்து தலைமை காவலர் கூறுகையில் திடீரென ஒரு கார் வந்து நின்றது, குழந்தை இறங்கி வந்து அங்கிள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், நல்லா டியூட்டி பாக்குறீங்க என்று கூறி டைரி ஒன்றை வழங்கியது, மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்தாக தெரிவித்தார்.

Updated On: 24 March 2022 5:22 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  6. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  9. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  10. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!