Begin typing your search above and press return to search.
உளுந்தூர்பேட்டை அருகே சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆடுகள் சாவு
உளுந்தூர்பேட்டை அருகே இன்று பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆடுகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த ஆடுகள்.
உளுந்தூர்பேட்டையில் இன்று இடி மின்னலுடன் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. மேலும் இரண்டு இடங்களில் இடி விழுந்ததன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மழையிலேயே நனைந்தபடி மின் ஊழியர்கள் பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு சில மணி நேரத்திற்குப்பின் மின் விநியோகம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை வட்டம், சிறுபுலியூர் கிராமத்தை சேர்ந்த கனேசன் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில், அவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தன. இதனால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.